Wednesday, October 28
Shadow

நடிகர் வி. எஸ். ராகவன் பிறந்த தினம்

வி.எஸ்.ராகவன் பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.

தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகேயுள்ள வெம்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இராகவன், பி. எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், செங்கல்பட்டு புனித கொலம்பசு பள்ளியிலும் கல்வி கற்று, சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் இரண்டாண்டுகள் கற்றார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் போது, தந்தை இறந்து விடவே, இராகவன் தாயாருடன் புரசைவாக்கத்தில் உள்ள சகோதரியுடன் சென்று வசித்து வந்தார்.

வி. எஸ். ராகவன், துவக்கத்தில் கே. பாலசந்தர் இயக்கிய பல மேடை நாடகங்களில் நடித்தார். நகையே உனக்கு நமஸ்காரம் என்ற பெயரில் நடித்த நாடகம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது

வி.எஸ். ராகவனுக்கு கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.கிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இயக்கிய மற்றும் நடித்த திரைப்படங்களில் சில

வைரமாலை, பொம்மை, நெஞ்சில் ஓர் ஆலயம், கள்வனின் காதலி, காலம் மாறிப்போச்சு, சமய சஞ்சீவி, சாரங்கதாரா, மனைவியே மனிதனின் மாணிக்கம், காத்திருந்த கண்கள், காதலிக்க நேரமில்லை, கர்ணன், சங்கே முழங்கு, சவாலே சமாளி, வசந்த மாளிகை, பட்டணத்தில் பூதம், கல்லும் கனியாகும், இரு கோடுகள், பாலன், உயிர், புன்னகை, குறத்தி மகன், உரிமைக்குரல், குமாஸ்தாவின் மகள், எல்லோரும் நல்லவர்களே, ஆயிரம் ஜென்மங்கள், கல்யாணராமன், தம்பிக்கு எந்த ஊரு
குரோதம், ருசி, சுமை தாங்கி, நல்ல தம்பி, ஸ்ரீ ராகவேந்திரர், நானும் ஒரு தொழிலாளி, உன்னால் முடியும் தம்பி, அவசர போலீஸ் 100, ஹே ராம், பூவெல்லாம் உன் வாசம், காமராசர், இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மகிழ்ச்சி, நகரம் மறுபக்கம், கலகலப்பு, சகுனி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், ஆல் இன் ஆல் அழகு ராஜா