
ஒரு பழம்பெரும் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர்.
என் தங்கை திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், மதுரை வீரன், படிக்காத மேதை, வீரத்திருமகன், குலேபகாவலி, பாக்கிய லட்சுமி, கொடுத்து வைத்தவள் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தார். இவர் சுமார் 70 திரைப்படங்களில் நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈ.வி சரோஜா. இயக்குநர் டி. ஆர். ராமண்ணா இவரின் கணவர் ஆவார்.
நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈ. வி. சரோஜா நவம்பர் 3, 2006 அன்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
விளையாட்டு பொம்மை, பெண்ணரசி, அமரதீபம், கொடுத்து வைத்தவள், என் தங்கை, குலேபகாவலி, நன்நம்பிக்கை, பாசவலை, மறுமலர்ச்சி, ரம்பையின் காதல், எங்கள் வீட்டு மகாலட்சுமி, நீலமலைத்திருடன், புதுமைப்பித்தன், மணாளனே மங்கையின் பாக்கியம், கடன் வாங்கி கல்யாணம், குடும்ப கௌரவம், பிள்ளைக் கனியமுது, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், சுமங்கலி, தங்கப்பதுமை, மனைவியே மனிதனின் மாணிக்கம், ஆடவந்த தெய்வம், கைதி கண்ணாயிரம், படிக்காத மேதை, பாட்டாளியின் வெற்றி, இரத்தினபுரி இளவரசி, விடிவெள்ளி, வீரத்திருமகன், ராணி லலிதாங்கி
