Wednesday, October 28
Shadow

லென்ஸ் – திரைவிமர்சனம் (சமுதாயத்தின் பார்வை ) Rank 4/5

தமிழ் சினிமாவில் அப்போது நல்ல கதைகளும் நல்ல சிந்தனைகளும் கொண்ட படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகது. சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் சிந்தனைகள் கொண்ட படம் தமிழ் சினிமாவும் ஊடகங்களும் தான் தொடர்ந்து கொடுத்து கொண்டே போகிறது.

இன்று சமுதயாத்தில் நடக்கும் மிக பெரிய கொடுமையை சொல்லி இருக்கும் படம் தான் லென்ஸ் திரைபடம் எல்லோருக்கும் பணம் மேல் மேல் இருக்கும் மோகம் தன் குடும்பம் மீதும் தன்னை சார்ந்த ஊர்கள் மீதும் இல்லாமல் போனதே பல குற்றங்கள் நடப்பதுக்கு முக்கிய கரணம் என்று பல முறை தமிழ் சினிமாவும் ஊடங்கங்களும் சொல்லி கொண்டே தான் இருக்கிறது.

இன்று பலர் முன் எச்சரிக்கை என்பது இல்லாமலும் இருகிறார்கள். நிறைய செய்திகள் வருகின்றது. அதை படித்து விட்டு அப்படியே குப்பையில் போட்டுவிட்டு பொய் விடுகிறார்கள் காரணம் நமக்கு எல்லாம் இப்படி நடக்காது என்றுஇருப்பது இல்லை நாம் எப்பவும் முன் எச்சரிக்கை வேண்டும் என்பதை சொல்லும் படம் தான் லென்ஸ் படம் என்னடா இது விமர்சனமா இல்லை அறிவுரை கட்டுரையா என்று தோன்றும் இந்த படம் போல தான் அறிவுரைக்கு அறிவுரை சினிமாவுக்கு சினிமா என்று தான் இந்த படத்தின் இயக்குனர் படம் எடுத்துள்ளார். ஒரு படத்தில் எத்தனை சிந்தனைகள் இவை அனைத்தும் போர் அடிக்காமல் கமர்ஷியல கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

இன்று தமிழ் சினிமா நன்றா உள்ளது காரணம் இளம் இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் நல்ல கதைகள் தொழில்நுட்பம் இப்படி எல்லாவிதத்திலும் மிகவும் கைதேர்ந்த இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் பல இயக்குனர்கள் யாரிடமும் உதவி இயக்குனர்களாக கூட பணிபுரிந்தது இல்லை என்பது மேலும் சிறப்பான விஷயம் அவர்களின் படம் தான் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அப்படியா இயக்குனர் தான் இவரும். ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இந்த படத்தில் ஆனந்த்சாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்,அஸ்வதி லால், மிஷா கோஷால்,ராதாகிருஷ்ணன், அம்பேத், பரமேஸ்வரன், சஞ்சீவி இவர்கள் நடிப்பில் S.R. கதிர் ஒளிப்பதிவில் G.V.பிரகாஷ் இசையில் இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குனர் வெற்றிமாறன் தமிழகம் முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

படத்தின் கதையை முழுமையாக விவாதிக்க வேண்டாம் அரங்கத்தில் பார்த்தால் தான் இந்த படத்தின் அருமை பலருக்கு தெரியும் படமும் அப்பத்தான் சிறப்பக இருக்கும் என்பதால் சில நல்ல விஷயங்கள் மட்டும் பார்ப்போம்.
ஆனந்த் சாமி யாரும் இல்லாத அநாதை இவர் பாசத்துக்கு எங்கும் ஒரு மனிதன் அவரின் வாழ்கையில் ஊமை அஸ்வதி லாலுடன் திருமணம் பல கனவுகள் தனக்கு உறவு என்று சொல்ல ஒருவள் அவளின் அப்பா எனக்கும் அப்பா என்று வாழ்கையை ஆரம்பிக்க இருக்கும் ஆனந்த் சாமி வாழ்கையில் முதல் இரவு அறைக்குள் மிகவும் ஆனந்தமாக தன் மனைவியுடன் வாழ்கையை துவங்க செல்கிறான்.

திருமணம் ஆன மூன்றாம் மாதம் அஸ்வதி தாயாக போகிறாள் என்ற சந்தோசம் அதே சமயம் பேர் இடி என்ன என்று கேட்கிறீர்களா இவர்களின் முதல் இரவை யாரு சமுக வலைதளங்களில் வீடியோ பரவுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ஆனந்த் யார் செய்தது என்று போலீசிடம் சொல்கிறார். போலிஸ் இவரை நீங்க இந்த வீடியோ எடுதிங்களா என்று இவரை கேட்க அவர் தடுமாறுகிறார் இல்லை என்று சொல்ல ஆனால் அதுக்குள் இந்த வீடியோ தீயாய் பரவுகிறது இதனால் மனம் உடைந்த ஆனந்த் சாமி மனைவி தற்கொலை செய்கிறாள். அவள் இறக்கும்போது இந்த வீடியோவால் நான் இறந்த செய்தியை இந்த உலகத்துக்கு சொல் என்று எழுதி வைத்து இறந்து விடுகிறாள்

பிறகு தான் தெரிகிறது இந்த வீடியோ எடுத்தது அவர்களின் வீட்டு பிளம்பர் என்று இதே வேலையாக இருக்கும் பிளம்பர் தான் இந்த வேலையை செய்துவந்துள்ளார். இதை ஆனந்த் சாமி கண்டுபிடிக்கிறார். ஆனால் இந்த வீடியோவை அந்த பிளம்பர் சமுக வலைதளங்களில் போடவில்லை அந்த வீடியோ இருந்த பைல் பெண் டிரைவ் காணமல் போகுது அது எப்படி பின்னர் சமுக வலைதளங்களுக்கு போச்சு அதை யார் செய்தது என்று ஆனந்த் சாமி கண்டுபிடிக்கிறார் அவனை பழிக்கு பழிவாங்க நினைக்கும் ஆனந்த் சாமி என்ன செய்தார் என்பது தான் மீதி கதை

பழிவாங்க போகிறார் என்றதும் கொலை கற்பழிப்பு இப்படி எதுவும் இல்லாமல் கொடுமை செய்த வில்லன் குடும்பத்தையும் அவனையும் ஒன்றும் செய்யாமல் பழிவாங்குகிறார் அது தான் மிக சிறந்த திரைகதையுக்தி இதி சொன்னால் படம் பார்க்கும் விறுவிறுப்பு இருக்காது திரையில் பாருங்கள்

படத்தில் அவர் அவர் பங்கை மிகவும் உணர்ந்து நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரம் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார் அந்த பாத்திரத்துக்கு மிக சிறப்பக உயிர் கொடுத்துள்ளார். என்று தான் சொல்லணும்.

ஆனந்த் சாமி மிக சிறந்த நடிகர் என்று மீண்டும் நிருபித்துள்ளார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக உணர்ந்து நடித்துள்ளார் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ஒரு ரகுவரன் என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்.

மொத்தத்தில் லென்ஸ் சமுதாயத்தின் கண்ணாடி Rank 4/5

Leave a Reply