தனுஷ் இயக்கி, தயாரித்து வரும் ‘பவர்பாண்டி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் சினிமா ஸ்டண்ட் நடிகர் பற்றிய படம் என்று கூறப்படுகிறது. இதில் ராஜ்கிரணுடன் தனுஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’, இப்போது படப்பிடிப்பில் இருந்து வரும் ‘கவண்’ ஆகிய படங்களில் நடித்த மடோனா செபாஸ்டியன், ‘பவர் பாண்டி’ பட மூலம் முதன் முதலாக தனுஷுடன் ஜோடி சேருகிறார் இவர்களுடன் பிரசன்னா, சாயா சிங், உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘பவர் பாண்டி’க்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.