V studios மற்றும் PG MEDIA WORKS இணைந்து தயாரித்து சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் மதுரை வீரன் படத்தின் துவக்கவிழா புரட்சி கலைஞர் விஜயகாந்த் முன்னிலையில்,பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து வைக்க இன்று சென்னையில் துவங்கியது.இவ்விழாவில் எல்.கே.சுதீஷ் மற்றும் இப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி, மொட்டை ராஜேந்திரன்,பால சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் 15 நாட்கள் தொடர்ந்து படபிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் PG முத்தையா. தயாரிப்பு விஜி சுப்பிரமணியம்.