Friday, March 13
Shadow

பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

‘சகாப்தம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயகாந் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’.

வி.ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக மீனாட்சி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் என பலரும் நடித்துள்ள இந்த படம் ஜல்லிக்கட்டு, விவசாயத்தை மையக் கருவாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. டீசரை படத்தின் முதல் சிங்கிளான `என்னடா நடக்குது நாட்டுல’ பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் டுவிட் பின்வருமாறு,

#சண்முகபாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் திரைப்படம் 2018 பொங்கல் பண்டிகையன்று வெளிவருகிறது. இப்படத்தின் #என்னநடக்குதுநாட்டுல பாடல் நாட்டின் த‌ற்போதைய அவல நிலையை தோலுரித்துக் காட்டுவதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இப்பாடல் ஒலிபரப்பப்படுகிறது. இப்பாடலை இயற்றிய கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் முத்தையாவுக்கும், மதுரவீரன் படக்குழுவினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மதுர வீரன்’ ரிலீசாகும் அதே தேதியில் தான் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் `ஸ்கெட்ச்’, விஷாலின் `இரும்புத்திரை’, பிரபுதேவாவின் `குலேபகாவலி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply