மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்) (3/5)
மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றின் தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் மக்கள் அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் செல்லக்கூடாது. ஜல்லிக்கட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளில் களமிறங்க கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கட்டுள்ளது. அவர்களும் கோயிலுக்குள் வர வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்று அந்த ஊர் மக்களு ஆதரவாக பேசுகிறார் சமுத்திரக்கனி.
அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது. அதில் பக்கத்து ஊர் மக்களும் கலந்து கெள்கின்றனர். அந்த போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தியின் தம்பி, மைம் கோபியின் அண்ணன் உயிரிழந்து விடுகின்றனர்.
இதையடுத்து அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் சமுத்திரக்கனியின் மனைவி, அவரது சிறுவயது மகன் சண்...