Tuesday, July 21
Shadow

125 நாள் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மஹாகாளி’… இறுதிக்கட்டத்தை எட்டிய ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பிரம்மாண்ட காவியம்!

125 நாள் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மஹாகாளி’… இறுதிக்கட்டத்தை எட்டிய ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பிரம்மாண்ட காவியம்!

சென்னை:

இந்திய சினிமாவில் புராணக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து புதிய சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி வரும் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் அடுத்த முக்கிய அத்தியாயமான ‘மஹாகாளி’ திரைப்படம், 125 நாட்கள் நீண்ட பிரம்மாண்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு நிலையை எட்டியுள்ளது. இந்த முக்கிய மைல்கல், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

RKD Studios நிறுவனம் சார்பில் ஆர்.கே. துக்கல் வழங்க, ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்திற்கு, பிரசாந்த் வர்மா கிரியேட்டராக செயல்படுகிறார். இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இயக்கத்தில் உருவாகும் இப்படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய புராணத் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில், IMAX தொழில்நுட்பத்திற்கேற்ப உருவாக்கப்பட்டு வரும் ‘மஹாகாளி’, கண்கவர் காட்சியமைப்புகள், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

படத்தின் தயாரிப்புப் பயணத்தில் மற்றொரு முக்கியமான கட்டமாக, இளம் நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். இதற்கு முன்பே, சக்திவாய்ந்த சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா தனது பகுதிகளை நிறைவு செய்திருந்தார். இதன் மூலம் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடிகை பூமி ஷெட்டி நடிக்கிறார். தெய்வீகமும் உக்கிரமும் ஒன்றாக வெளிப்பட்ட அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான தருணத்திலேயே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சுக்ராச்சார்யாவாக அக்ஷய் கன்னாவின் முதல் தோற்றமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படம், ஆன்மிகக் கதைக்களத்தையும் நவீன திரைப்படத் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் அபூர்வ முயற்சியாக உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் புராணப் படங்களுக்கு புதிய தரத்தை உருவாக்கும் படைப்பாக ‘மஹாகாளி’ இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா கவனித்துள்ளார். பிரம்மாண்ட காட்சிகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியாகவும், கலை ரீதியாகவும் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு அம்சமும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி, டீசர், டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

புராணப் பின்னணியில் உருவாகும் இந்த மாபெரும் திரைப்படம், ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த முக்கிய அத்தியாயமாக மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாகவும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொழில்நுட்பக் குழு:

  • கிரியேட்டர்: பிரசாந்த் வர்மா
  • இயக்கம்: பூஜா அபர்ணா கொல்லுரு
  • வழங்குபவர்: ஆர்.கே. துக்கல்
  • தயாரிப்பாளர்: ரிவாஸ் ரமேஷ் துக்கல்
  • பேனர்: RKD Studios
  • இசை: ஸ்மரண் சாய்
  • ஒளிப்பதிவு: சுரேஷ் ரகுது
  • தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
  • நிர்வாகத் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
  • ஆடை வடிவமைப்பு: ஷில்பா GNS
  • விளம்பர வடிவமைப்பு: அனந்த் கஞ்சர்லா
  • மார்க்கெட்டிங்: ஹேஷ்டேக் மீடியா
  • மக்கள் தொடர்பு: யுவராஜ்

 Mahakali Wraps 125-Day Shoot; Prasanth Varma Cinematic Universe’s Next Epic Enters Final Phase

Chennai: The much-awaited Mahakali, the next major chapter in the Prasanth Varma Cinematic Universe (PVCU), has successfully completed an extensive 125-day shooting schedule and has now entered its final phase of production. The milestone marks a significant step forward for one of the most ambitious mythological films currently in production in Indian cinema.

Produced by Riwaz Ramesh Duggal under the RKD Studios banner and presented by RK Duggal, the film has been created by Prasanth Varma and is directed by Puja Aparna Kolluru. Designed as a grand mythological spectacle, Mahakali aims to deliver a visually immersive cinematic experience on an epic scale.

Adding to the excitement, actor Rohit Saraf has officially wrapped filming for his role, joining Akshaye Khanna, who had earlier completed shooting for his powerful portrayal of Shukracharya. The completion of the lead actors’ portions marks another important milestone in the film’s production journey.

Bhoomi Shetty plays the titular role of Mahakali, and her first-look poster, showcasing the goddess in a fierce and divine avatar, received an overwhelming response from audiences. Likewise, Akshaye Khanna’s striking first look as Shukracharya generated considerable buzz and heightened anticipation for his pivotal role within the PVCU.

Filmed specifically for the IMAX format, Mahakali promises breathtaking visuals, cutting-edge cinematic technology, and a larger-than-life theatrical experience. The film brings together talented actors from multiple Indian film industries, making it one of the most ambitious mythological projects in recent years.

The technical team features Smaran Sai as the music composer, Suresh Ragutu as the cinematographer, and Sri Nagendra Tangala as the production designer. Every aspect of the film has been meticulously crafted to blend spiritual grandeur with modern filmmaking techniques.

With the final schedule currently underway, the makers are working at full pace to complete production before moving into post-production. More announcements regarding the film’s release date, teaser, trailer, and promotional campaign are expected in the coming weeks.

As the next chapter in the expanding Prasanth Varma Cinematic Universe, Mahakali continues to build enormous anticipation and is shaping up to be one of Indian cinema’s most eagerly awaited mythological spectacles.

Technical Crew

  • Creator: Prasanth Varma
  • Director: Puja Aparna Kolluru
  • Presenter: RK Duggal
  • Producer: Riwaz Ramesh Duggal
  • Banner: RKD Studios
  • Music: Smaran Sai
  • Cinematography: Suresh Ragutu
  • Production Designer: Sri Nagendra Tangala
  • Executive Producer: Venkat Kumar Jetty
  • Costume Designer: Shilpa GNS
  • Publicity Designs: Ananth Kancherla
  • Marketing: Haashtag Media
  • PRO: Yuvraaj