Wednesday, October 28
Shadow

சரத்குமாரின் பிறந்தநாளில் புதிய கூட்டணியை அறிவித்த காவ்யா ஃபிலிம் கம்பனி – கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம்

சரத்குமாரின் பிறந்தநாளில் புதிய கூட்டணியை அறிவித்த காவ்யா ஃபிலிம் கம்பனி – கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம்

சென்னை, ஜூலை 14:

மலையாள திரையுலகில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் காவ்யா ஃபிலிம் கம்பனி, தற்போது தமிழ் சினிமாவில் தனது அடுத்த முக்கிய முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 12’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, நடிகர் ஆர். சரத்குமார் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நாளில் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவ்யா ஃபிலிம் கம்பனியும் சரத்குமாரும் முதன்முறையாக இணையும் படம் என்பதால், திரைப்பட வட்டாரங்களில் இந்த கூட்டணி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

‘2018’, ‘மாளிகப்புரம்’, ‘ரேக்காசித்திரம்’ உள்ளிட்ட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களை தயாரித்த அனுபவத்துடன், மீண்டும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தை, ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற கமல் பிரகாஷ் எழுதி இயக்குகிறார். வலுவான கதையம்சம், உணர்வுப்பூர்வமான திரைக்கதை மற்றும் புதிய காட்சிப்படுத்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவர், இந்த படத்தில் சரத்குமாரை இதுவரை ரசிகர்கள் கண்டிராத புதிய தோற்றத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு குறித்து தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி கூறுகையில், “சரத்குமார் போன்ற அனுபவமிக்க நடிகருடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. பல தலைமுறைகளாக தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் அவர். இந்தக் கதைக்கு அவர் மட்டுமே பொருத்தமான தேர்வாக இருந்தார். இயக்குநர் கமல் பிரகாஷ் மிகுந்த நம்பிக்கையுடனும் தெளிவுடனும் இந்தத் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். ரசிகர்களுக்கு தரமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் படைப்பாக இது இருக்கும்,” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் தொடங்க உள்ளது. திட்டமிட்டபடி நவம்பர் 2026-க்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து, 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவை கோகுல் பெனாய், இசையை ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பை கலைவாணன் ஆர், கலை இயக்கத்தை எஸ்.எஸ். மூர்த்தி மேற்கொள்கின்றனர். ‘சார்பட்டா பரம்பரை’, ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற தமிழ் பிரபா, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். ஆடை வடிவமைப்பை தினேஷ் மனோகரன், மேக்கப்பை ரோனெக்ஸ் சேவியர், லைன் புரொடக்ஷனை கோபகுமார் ஜி.கே., நிறுவன தயாரிப்பு கட்டுப்பாட்டை ஷிபு ஜி. சுசீலன் கவனிக்கின்றனர்.

படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த கட்டங்களில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தரமான படைப்புகளுக்குப் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம், அனுபவமிக்க நடிகர் சரத்குமார் மற்றும் இளம் இயக்குநர் கமல் பிரகாஷ் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, 2027-ஆம் ஆண்டின் முக்கியமான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகில் நிலவுகிறது.

Kavya Film Company Announces Production No. 12 Starring R. Sarathkumar on His Birthday

Chennai, July 14, 2026:

Renowned production house Kavya Film Company, known for delivering critically acclaimed and commercially successful films such as 2018, Rekhachithram, and Malikappuram, has officially announced its next prestigious Tamil project. The film, currently titled Production No. 12, marks another ambitious venture from producer Venu Kunnappilly.

The announcement was made on the occasion of veteran actor R. Sarathkumar’s birthday, making it a special celebration for the star and his fans. This also marks the first-ever collaboration between Kavya Film Company and Sarathkumar, generating significant excitement across the Tamil film industry.

The film will be written and directed by Kamal Prakash, who earned recognition with his directorial venture Kingston, starring G.V. Prakash Kumar. Known for his distinctive storytelling and engaging screenplay, Kamal Prakash is set to present Sarathkumar in a powerful and completely new avatar that audiences have never seen before.

Speaking about the project, producer Venu Kunnappilly said:

“We are delighted to announce our next Tamil film on the birthday of Mr. R. Sarathkumar. His remarkable versatility and exceptional performances have inspired audiences and the film fraternity for decades. We believe this powerful script, combined with a passionate team, will make for a memorable cinematic experience. Director Kamal Prakash has approached this story with great conviction, and we are excited to bring this vision to audiences worldwide.”

Principal photography is scheduled to commence soon at prominent locations across Chennai. The makers plan to complete the entire shoot by November 2026, with a worldwide theatrical release targeted for early 2027.

The film boasts a talented technical crew featuring some of the industry’s finest professionals:

  • Director & Writer: Kamal Prakash
  • Producer: Venu Kunnappilly
  • Cinematography: Gokul Benoy
  • Music: Justin Prabhakaran
  • Editing: Kalaivanan R
  • Production Design: S. S. Moorthy
  • Additional Screenplay & Dialogues: Thamizh Prabha (Sarpatta Parambarai, Thangalaan)
  • Costume Design: Dinesh Manoharan
  • Make-up: Ronex Xavier
  • Line Producer: Gopakumar G.K.
  • Production Controller: Shibu G. Suseelan

The makers have confirmed that the film’s official title, additional cast members, and further production updates will be unveiled in the coming months.

With an acclaimed production house, a celebrated actor, and a promising filmmaker joining hands for the first time, Production No. 12 is already shaping up to be one of the most anticipated Tamil films slated for release in 2027.