Wednesday, March 26
Shadow

நடிகை பாவனா பாலியல் வழக்கில் பிரபல நடிகர் திலிப் கைது

மலையாள நடிகர் திலீப் நடிகை பாவனாவை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் தற்போது கைதாகி உள்ளார்.

திலீப்பின் உண்மையான முகத்தை இப்போது ஏசியாநெட் நியூஸில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

திலிப் ஒரு டான் என்றும் மலையாளப் பட உலகின் கட்டைப் பஞ்சாயத்து ராஜா என்றும் வர்ணிக்கிறார்கள். திலீபை ஒரு சிலர் கொச்சின் தாவூத் என்று கூறுகிறார்கள்.

பல தயாரிப்பாளர்களை மிரட்டிப் பணம் பறித்து 15 வருடங்களாக நடிகன் என்ற முகமூடியில் இத்தனை வஞ்சனைகளையும் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

முதல்வர் பிணராய் விஜயன், சட்டம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தன் கடமையைச் செய்யும் என்கிறார்.

மலையாளிகள் திலீப்பின் நிஜமுகம் கண்டு அரண்டு போயிருக்கிறார்கள். கேரளா ஆலுவாவில் மக்கள் களத்தில் இறங்கி, திலீபை விடுதலையோ, ஜாமீனிலோ விடக்கூடாது என்று தெருவில் கோஷமிட்டுப் போராடுகிறார்கள்.

மொத்தத்தில் ஒரு நல்ல நடிகன் (எனக்கு மிகவும் பிடித்த நடிகர்) வாழ்க்கையில் இத்தனை ஏண்ட்டி ஹீரோவா என எண்ணி மனம் கனக்கிறது.

பாதிக்கப் பட்ட பாவனா மற்றும் மஞ்சு வாரியருக்கும் ஏனைய தயாரிப்பாளர்களுக்கும் நியாயம் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்!

Leave a Reply