Saturday, February 15
Shadow

மூன்று காலக்கட்டங்களில்நடக்கும் காமெடி கலந்த திரில்லர் மரகதநாணயம்

‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி. டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கி இருக்கும் இந்த ‘மரகத நாணயம்’ திரைப்படத்தில் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை போன்ற சிறப்பம்சங்களின் கலவையில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“சென்சாரில் ‘U’ சான்றிதழை பெறுவது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில் ‘மரகத நாணயம்’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘U’ சான்றிதழை வழங்கி இருப்பது, எங்கள் ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.தரமான படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். ஒரு படத்தின் தரத்தை உயர்த்துவது ‘U’ சான்றிதழ்தான். அந்த ‘U’ சான்றிதழை பெற்று இருக்கும் எங்கள் ‘மரகத நாணயம்’, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை கவரும்” என்று உற்சாகமாக கூறினார் தயாரிப்பாளரும், ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் நிறுவனருமான டில்லி பாபு.

படம் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.ஷரவண், “சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி கொஞ்சம் கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறேன். இதுவொரு பேண்டசி, அட்வென்ச்சர், காமெடி கலந்த கதை. 1100, 1992, 2016 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் இந்தப் படம் நிகழ்கிறது. காஸ்ட்லியான ஒரு மரகத நாணயத்தைத் தேடும் படலம்தான் படத்தின் திரைக்கதை. ஹீரோ ஆதி டீமும், வில்லன் ஆனந்தராஜ் டீமும் இந்த மரகத நாணயத்தை மும்முரமாகத் தேடுகிறது. இறுதியில் அது யாருடைய கையில் கிடைக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

அந்த நாணயத்துக்குள் அதிர்ஷ்டம், அமானுஷ்யம் எல்லாமும் அடங்கியிருக்கிறது. அது இருக்கிற இடத்தில் பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அவ்வளவு ஆபத்தான அதனை பணத்துக்காக அடைய முயற்சித்து இதனால் இவர்கள் பாடு என்னவாகிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம்.

ஹீரோயின் நிக்கி கல்ரானிக்கு இதில் முக்கியமான வேடம். அவர்தான் ஆவியா.. அல்லது பேசத் தெரிந்தவரா என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ். ரசிகர்கள் இதுவரை ஆதியை ஒரு அதிரடி நாயகனாகத்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் எங்களின் இந்த ‘மரகத நாணயம்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆதியை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார்கள்” என்றார்.

Leave a Reply