Wednesday, October 28
Shadow

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேரபோகும் மீரா மிதுன் காரணம் என்ன ?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் (14.07.2019) இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா வெளியேறினார். அது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பிறகு வெளியே வந்த வனிதா கமல்ஹாசனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி பார்வையாளர்களுடன் அவர் அமர்ந்திருந்தார்.  அப்போது மற்ற போட்டியாளர்களிடம் வனிதா பற்றி கேட்டறிந்தார்.அதோடு வனிதா பேசிய விஷயங்களுக்கு கமல் ஹாசன் மிகவும் வனிதாவை பாராட்டினார்.

அதற்கு ஒவ்வொருவரும் வனிதா பற்றி தங்களுக்கு தோன்றியதை தெரிவித்தனர்.  குறிப்பாக ஷெரின், சாக்ஷி உள்ளிட்டோர் வனிதா பற்றி பெருமையாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர் கண்கலங்கினார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3யின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீரா பற்றி ஷெரினும் சேரனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது பேசும் சேரன், ”அவளுக்கு பிக்பாஸ் வீட்ட விட்டு வெளியேறுவோம்னு பயம் வந்துடுச்சு. அதனால தான் இப்படி பன்றா. லவ் பன்றேன் மச்சான். கல்யாணம் பண்ணிக்க போறேன் மச்சானா என்ன அர்த்தம்?” என்று சேரன் கோவமாக தெரிவித்தார்.

மீரா மிதுன் தன்னை நல்லவர் என்று காண்பிக்க எல்லோரையும் மிகவும் மோசமாக வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார் அதோடு நேற்று நிகழ்ச்சியின் முடிவில் மீரா இனி என்னிடம் வம்புக்கு வருபவர்களை பச்சை பச்சையாக திட்டுவேன் என்று ஆவேசமாக கூறினது ரசிகர்களுக்கு மிகவும் வெறுப்பில் உள்ளனர்