Monday, April 20
Shadow

மெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5

அறிமுக இயக்குனர் கீராவின் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள படம் தான் மெர்லின் படத்தை காமெடி கலந்த திகில் படமாக கொடுத்துள்ளார் .

படத்தில் நாயகனாக விஷ்ணு பிரியன் நாயகியாக அஸ்வினி இவர்களுடன் ஜீவா முருகானந்தம் மற்றும் பலர் நடிப்பில் கணேஷ் ராகவேந்தர் இசையில் முத்துகுமரன் ஒளிப்பதிவில் கீரா கதை திரைகதை வசனம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்

நாயகன் விஷ்ணுபிரியன் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அடியெடுத்து வைக்க துடிக்கும் ஒரு இளைஞன். இவருக்கு நண்பர்களாக லொள்ளு சபா ஜீவா, ஆடுகளம் முருகதாஸ்.

விஷ்ணுபிரியனின் தனது கதையை அட்டகத்தி தினேஷிடம் கூறுகிறார். கதை அவருக்கும் கதை பிடித்து போகிறது.

இந்நிலையில், படத்தின் திரைக்கதையை உருவாக்கும் பணியில் இறங்குகிறார் விஷ்ணு பிரியன். தனது படத்தின் கதைக்கு உயிரோட்டம் கொடுப்பதற்கு தனது நண்பர்களிடம் ஒரு பேய் கதையை கூறி அதன் உண்மைதண்மை பார்க்க நினைக்கிறார் விஷ்ணு.

அவர் கூறிய அந்த பொய்யான கதை அடுத்த நாள் முதல் நிஜத்திலும் நடைபெற ஆரம்பிக்கிறது. இதனையடுத்து நாயகன் விஷ்ணு பிரியன் மீது ஒரு பெண்ணின் அமானுஷ்ய சக்தி இறங்கிவிட, யார் அந்த பெண்..?? எதற்காக விஷ்ணு பிரியனின் உடலில் அவர் இறங்கினார்..?? என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கீரா.

நாயகன் விஷ்ணுபிரியன் தனது நடிப்பில் தனித்துவத்தை காட்டியிருக்கிறார். தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் போது அவரின் முக பாவணைகளும் சரி, தனது நண்பர்களிடம் கதை கூறும்போது வந்த எக்‌ஷ்ப்ரஷண்களும் அப்லாஷ். நாயகியுடனான காதல் காட்சிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

நாயகனின் நண்பனாக வரும் லொள்ளு சபா ஜீவா மற்றும் ஆடுகளம் முருகதாஸ் இருவரும் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் கோபத்தைத்தான் வர வைக்கிறார்கள்.நாயகி அஸ்வினி அழகாக வந்து செல்கிறார்.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பின்னனி இசை மிரட்டல்.. பாடல்கள் எடுபடவில்லை. முத்துக்குமரனின் ஒளிப்பதிவில் போதுமான வெளிச்சம் இல்லை.

பல படங்களில் பார்த்த, கேட்ட கதைதான் என்றாலும் அதற்கு புதுமை கொடுக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார்…

மெர்லின் – பேய் படம்ன்னு சொன்னாங்க… கடைசி வரை பேய காணோமே! Rank 2/5