
விஜய்யின் மெர்சல் படம் சினிமா ரசிகர்கள் பிரம்மாண்டமாக வரவேற்ற ஒரு வெற்றி படம். படத்தின் வசூல் ரூ. 200 கோடியை தாண்டி அமோகமாக வசூல் சாதனை செய்து வருகிறது.
ஒருபக்கம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி செய்திகள் வருகின்றன, இன்னொரு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் தங்களது திரையரங்கில் விஜய்யின் மெர்சல் எப்படி ஒடுகிறது என்பதையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரோஹினி சினிமாஸில் அதிக வசூலில் ஆல் டைம் No1 விஜய்யின் மெர்சல் என்று பதிவு செய்துள்ளனர்.
