
மெர்சல் படம் வெளியாகி விஜய்க்கும் படகுழுவுக்கும் சற்று கூட நிம்மதியும் சந்தோஷமும் இல்லை என்று தான் சொல்லணும் அது ஏன் விஜய் மீது இப்படி எல்லோரும் கங்கணம் கட்டி கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை ஏழை மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு சக மனிதரில் அவரும் ஒருவர் பொது மக்களுக்காக எந்த நேரத்தில் தன குரலை எழுப்பும் ஒரு சிறந்த நடிகர் அவர் அவருக்கு ஏன் எப்போதும் தொடர்ந்து பிரச்சனைகள் பூகம்பம்போல கிளம்புகிறது என்று தெரியவில்லை ஏற்கனவே பா.ஜா.க வால் ஏற்பட்டுள்ள குழப்பம் போதாது என்று புதுசாக மதுரையில் ஒரு குழப்பம்
மெர்சல் படம் குறித்து உருவான சர்ச்சை தொடர்ந்துக்கொண்டே இருந்தாலும், அப்படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி குறித்த வசனங்கள் நீக்கப்படவில்லை. அதே சமயம், தேவைப்பட்டால் காட்சிகளை நீக்க தயார், என்று தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கல் சங்கம் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் என்று ஏராளமானோர் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும், தமிழக பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் பற்றியும், விஜய் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ஜி.எஸ்.டி க்கு எதிராகப் ஏசிய, வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
