Saturday, April 18
Shadow

மெர்சல் இன்று ஹாலிவுட் அளவில் பிரபலம் யார் காரணம் தெரியுமா ?

மெர்சல் பிரச்சனை இந்தியா அளவில் தான் தெரிந்தது ஆனால் நேற்று விஜய்யின் நாயகி ஹாலிவுட் புகழ் மற்றும் பாலிவுட் புகழ் பிரியங்கா சோப்ரா போட்ட ஒரு ட்விட் விஜய் ஹாலிவுட் நடிகர்களை கிசு கிசுக்கவைதுள்ளது மெர்சல் பிரச்சனை இன்று உலக தமிழர்களுக்கு மட்டுமே தெரிந்ந்த பிரச்சனை இன்று உலகம் முழுதும் பிரபலம் ஆகிவிட்டது

‘மெர்சல்’ பட சர்ச்சையால் தேசிய அளவில் பிரபலமாகியுள்ள நடிகர் விஜய், தற்போது நடிகை ஒருவரது அதிரடி ட்வீட்டால் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார்.

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அவர் நடித்த முதல் திரைப்படமும் அது தான். அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், ”நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவருடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘மெர்சல்’ பட விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவதன் மூலம் அவர் இந்திய அளவில் பிரபலமான நிலையில், தற்போது பிரியங்கா சோப்ராவின் ட்வீட்டால் ஹாலிவுட்டிலும் விஜய் பிரபலமாகியுள்ளார்.

Leave a Reply