
பெண்களுக்கான படம் எடுக்க ஒரு சில இயக்குனர்கள் தான் உள்ளனர். அது இப்ப மட்டும் காலம்காலமாக அந்த அந்த காலகட்டத்தில் ஒரு சில இயக்குனர்கள் பெண்களுக்கான கதையை தேர்ந்துடுத்து எடுப்பார்கள் இந்த காலகட்டத்துக்கு நமக்கு கிடைத்த இயக்குனர் பிரம்மா ஆம் இவரின் குற்றம் கடிதல் படமும் முழுக்க முழுக்க பெண்கள் பற்றிய படம் அதோடு ஆண்களுக்கு ஒரு சவுக்கடி கொடுப்பார் அதை தான் இந்த படத்திலும் செய்துள்ளார் ஆனால் முழக்க முழுக்க நகைசுவையுடன் கொடுத்துள்ள படம் தான் மகளியர் மட்டும்
இயக்குனர் பிரம்மா நமக்கு கிடைத்த பெருமையான இயக்குனர்களில் ஒருவர் என்று சொன்னால் நிச்சயம் இகையாகத்து அந்த அளவுக்கு சிறந்த இயக்குனர். இந்த படத்தில் இரண்டு தலைமுறை வாழ்க்கையை மையப்படுத்தி கதையை அமைத்துள்ளார் முப்பத்திஎட்டு வருடங்கள் முன் மூன்று பெண்களின் நட்பையும் இன்று அவர்களின் வாழ்வாதராமும் அவர்களின் நட்பு இன்று எப்படி இருக்கு என்று மிக அழுத்தமாக அதோடு நகைசுவையாகவும் சொல்லி இருக்கார்
அன்று கமல்ஹாசன் தயாரித்த மகளியர் மட்டும் படத்துக்கு கதை எந்த அளவுக்கு பலமோ அந்த அளவுக்கு அதில் நடித்த நடிகைகள் தான் அந்த படத்தின் மிக பெரிய வெற்றி அதை அப்படியே தொடர்ந்துள்ளார் இயக்குனர் என்று சொல்லணும் அதே போல கமலின் அகழியர் மட்டும் டைட்டில் மரியாதையும் காப்பாற்றுகிறார்.
படத்துக்கு மிக பெரியபலம் ஊர்வசி,சரண்யா, பானுப்ரியா,மற்றும் ஜோதிகா இவர்களோடு நடித்து இருக்கும் ஆண்களும் மிக சிறந்த நடிகர்கள் குறிப்பாக நாசர், லிவிங்ஸ்டன்,பவல்,கோகுல், மற்றும் பல நடிப்பில் ஜிப்ரான் இசையில் மணிகண்டன் ஒளிப்பதிவில் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிரம்மா படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.
பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் ஆணவத்தையும் மற்றும் தாழ்வுமனப்பான்மையும் பற்றி சொல்லி இருக்கும் படம் தான் மகளியர் மட்டும்
மூன்று மிக நெருக்கமான நண்பிகள் இவர்கள் கிறிஸ்துவ விடுதியில் தங்கி படிக்கிறவர்கள் அந்த காலத்து PUC அதாவது இன்றைய +2 படிப்பு சரண்யா ஊர்வசி பானுப்ரியா இந்த மூன்று பெரும் தான் இவர்கள் இந்த கல்லூரி மிகுந்த வாலுகள் என்று தான் சொல்லணும் இவர்களின் கலாட்டாவால் ஒரு கட்டத்தில் அதாவது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ரஜினி மற்றும் கமல் நடித்த அவள் அப்படிதான் படம் பார்க்க விடுதியின் சுவர் எகிறிக்குதித்து படம் பார்க்க போகிறார்கள்.
ஆனால் இந்த மூன்று பெரும் பள்ளி நிர்வாகத்திடம் மாட்டி கொள்ள மூவரையும் விடுதியில் இருந்து விரட்டுகிராகள் இங்கு பிரிந்த இந்த மூவர் மீண்டும் சந்தித்தார்களா இல்லையா இந்த தருணத்தில் இவர்களின் வாழ்கை எப்படி இருந்தது என்பது தான் மீதி கதை இதில் ஜோதிகா என்ன என்று சொல்ல்கிறேன் இந்த மூவரில் ஊர்வசி மகனை காதலி தான் ஜோதிகா இவரு இவர்களை போலவே துடுக்கான பெண் அதோடு சமுதாய சிந்தனை அதிகம் கொண்ட பெண் இவர் ஒரு ஆவணப்பட இயக்குனரும்.
ஊர்வசி தன் நட்புகளையும் அவர்களை பார்க்கணும் என்று சொல்ல அதற்கான முயற்சியில் இறங்குகிறார் ஜோதிகா அவருக்கு எப்பவும் போல கை கொடுப்பது பேஸ் புக் (முகநூல் ) தான் இதன் மூலம் மற்ற அதாவதுபானுப்ரியா மற்றும் சரண்யாவை இதில் பானுப்ரியா ஆக்ராவில் இருக்கிறார் சரண்யா ஹைதராபாத் இருக்கிறார் இந்த மூவர்களை எப்படி இணைகிறார் என்பதையும் இவர்கள் கணவர்கள் மற்றும் பிள்ளைகள் இவர்களை நடத்தும் விதம் பார்த்து கொதித்த ஜோதிகா இவர்களை மீண்டும் சந்தோஷ வாழ்கை கொண்டுவரணும் இவர்கள் பிரிந்த அவள் அப்படிதான் ரிலீஸ் தேதியில் மீண்டும் ஒன்று சேர்க்கும் முயற்சி தான் படம்
நடிப்பில் எல்லோரும் புலிகள் போட்டி தான் எல்லோருக்குள் யார் சிறந்த நடிகை என்று போட்டி போடுகிறார்கள் குறிப்பாக ஊர்வசி சரண்யா இந்த இருவரும் சும்மா சாதரணமாக தன் முக பாவங்களிலும் நகைசுவைகளிலும் ஒரு கைபாக்கிரார்கள் ஜோதிகா கொஞ்சம் ஓவர் நடிப்பு என்று தான் சொல்லணும் ஆனால் இந்த கதபாத்திரத்துக்கு நியாபடுத்துகிறது என்றும் சொல்லணும்
கொஞ்ச நேரம் வந்தாலும் பானுப்ரியாவின் கணவராக வரும் நாசர் மனதில்நிற்கிறார் அதே போல லிவிங்ஸ்டன் சரண்யாவின் கணவர் குடிகாரர் தன் காதலியை நினைத்து குடிப்பவர் இந்த பாத்திரத்தை மிக அற்புதமாக செய்துள்ளார் ஊறுகாய் பாட்டிலில் சரக்கை வைத்து குடிப்பது அதே போல குடித்துவிட்டு வந்து பழய காதல் பாடுகளை கிட்டார் வைத்து கொண்டு பாடுவது செம நகைசுவையாக செய்துள்ளார்
பானுப்ரியாவின் மகனாக நடித்து இருக்கும் பவல் மிக சிறந்த நடிகர் என்று நிருபித்துள்ளார் அரசியவாதியான இவர் பாசம் பந்தம் இதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் தன் அரசியல் மட்டுமே என்று வாழ்பவர் அதேபோல பெண்களை ஒரு வேலைக்காரியாகவும் போதை பொருளாகவும் பார்ப்பவர் ஒரு கட்டத்தில் அவர் திருந்தும் இடம் அதே போல தவறை உணர்ந்து தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு கதறும் இடம் நம்மை மெய்சிளிர்க்கவைகிறார்
படம் இரண்டாம் பாகம் முழவதும் ஆக்ரா சத்தீஷ்கர் என்று அற்புதமாக டிராவல் தான் அதை மிக அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் படத்துக்கு இக பெரிய பலம் என்று தான் சொல்லணும் அதே போல இசை ஜிப்ரான் இவரும் படத்துக்கு மிக பெரிய பலம்
மகளியர் மட்டும் மொத்ததில் அனைவருக்கும் Rank 4/5
