Monday, October 26
Shadow

மான்ஸ்டர் – திரை விமர்சனம் Rank 3.5/5

டாம் அண்ட் ஜெர்ரி-ஐ தொடர்ந்து, ஹாலிவுட்டில் எலி வைத்து எடுத்த பல படங்கள் ஹிட் வெளியாகி கிட் அடித்துள்ள நிலையில், அதே வரிசையில் வெளியாகியுள்ள படம் தான் மான்ஸ்டர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்

EB யில் வேலை செய்பவர் ஹீரோ அஞ்சனம் அழகிய பிள்ளை (எஸ் ஜே சூர்யா). இவருக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போக்கிறது. சொந்த வீடு வாங்கினால் திருமணம் ஆகும் என்பதை நம்பி சொந்த வீடு வாங்கும் வேலையை பார்க்க தொடங்குகிறார்.

வீட்டில் இவருக்கு தேடப்பட்ட மணப்பெண் மேகலா (பிரியா பவானி ஷங்கர்). அவர் வீட்டில் தம்மாந்தூண்டு எலி குடைச்சல் குடுக்க ஆரம்பிக்கிறது. மறுபுறம் வில்லன் தனது வைரங்களை மீட்க எடுக்கும் முயற்சி என ஜாலி ரோலர் கோஸ்டர் பயணமே இப்படம். கதை இவ்வளவு சிம்பிளாக இருந்தாலும் மேக்கிங்கில் அசத்தியுள்ளார் இந்த டீம்.

படத்தின் ரியல் ஹீரோ ஒரு எலிதான். பெரும்பாலும் நிஜ எலிதான். இது எண்ட்ரியாகும் போதெல்லாம் அடுத்து என்ன நடக்குமோ? என்று ஆடியன்ஸை கிலி ஏற்படுத்தி விட்டது.

முதல் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு … கலகலப்பு … செண்ட்டிமெண்ட் என படத்தை கொண்டு செல்லும் இயக்குநர்.

அஞ்சனம் அழகிய பிள்ளை என்ற கேரக்டரில் நடித்துள்ள எஸ்.ஜே சூர்யா, ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நாயகி பிரியா பவானி சங்கர் ரசிகர்களை கவர்கிறார். காமெடியன் கருணாகரனின் காமடி சிரிக்க வைக்கிறது. பல இடங்களில் கருணாகரனின் காமெடி சந்தானம் + கவுண்டமணி இருவரும் சேர்ந்த கலவையாகவே இருக்கிறது.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை. சாபு ஜோசப் எடிட்டிங் கூடுதல் பிளஸ்.

படத்தின் பிளஸ்:

எலியினை இவ்வளவு தத்ரூபமாக காமித்ததற்கு படக்குழுவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

எலியின் பார்வையில் காட்டிய காட்சிகள் எல்லாம் உலகத்தரம் .

படத்தின் ரன்னிங் டைம்

ஒரு தவிர்க்க முடியாத மைனஸ்.

மொத்ததில் ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.