Friday, April 17
Shadow

ராகவா லாரன்ஸ்யின் மொட்ட சிவா கெட்ட சிவா வரும் 9ம் தேதி தடைகளை உடைத்து ரிலீஸ்

மொட்ட சிவா கெட்ட சிவா இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நிக்கி கல்ராணி லக்ஷ்மிராய் சத்யராஜ் கோவைசரளா சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் இர்ருவாகி இருக்கும் படம் இந்த படத்துக்கு இசை அம்ரீஷ் படத்தின் இயக்குனர் சாய் ரமணி இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை சூப்பர் குட் நிறுவனம் தயாரித்துள்ளது அவர்களின் 88 வது படம் இது இந்த படம் வரும் 9ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது என்பதை இப் பட குழுவினர் நேற்று மாலை மிகவும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்கள் .

இதற்க்கு காரணம் இந்த படம் போன மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய படம் ஆனால் இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்களை ஏற்படுத்தியனர். எப்படியாவது இந்த படத்தை வெளிவரமால் தடுக்க பல பொய்யான வழக்குகள் இவை அனைத்தையும் உடைத்து இந்த படம் வரும் வியாழன் வெளியாகும் என்று மிகவும் சந்தோசத்துடன் தெரிவித்தனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும் பொது இந்த படம் வெளியாவதில் என்னைவிட என் அம்மாவுக்கு தான் மிகவும் சந்தோசம் என்று தெரிவித்தார். ஏன் என்றால் இதுவரை என்படங்கள் இப்படி ஒரு பிரச்சனையை சந்ததில்லை இதனால் என் அம்மா மிகவும் கவலைபட்டார். இப்போது தான் எனக்கும் என் பட குழுவினரும் மிகவும் சந்தோஷ படுகிறோம் என்று தெரிவித்தார். இந்த பிரஸ் மீட்யில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்கள் முன்னிலை வகித்தார் அவருடன் வினியோகிஸ்தர் கூட்டமைப்பு தலைவர் செல்வின்ராஜா தயாரிப்பாளர் R.B,சௌத்ரி டாக்டர் சிவபாலன் இயக்குனர் சாய் ரமணி இசையமைப்பாளர் அம்ரீஷ் கலந்து கொண்டனர் .

Leave a Reply