
ரசிகர்களிடம் மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்த்த படம் மிஸ்டர் லோக்கல் ஆனால் இந்த படம் ரிலீஸ் தள்ளி போகிறது ஏன் தெரியுமா
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்க எம்.ராஜேஷ் இயக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. சீமராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ராதிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கும் இந்த படத்தில் இடம் பெறும் ‘டக்குனு டக்குனு…’ என்று துவங்கும் பாடல் ஏற்கெனவே வெளியானநிலையில் அடுத்து ‘கலக்கலு…’ என்ற பாடலின் லிரிக் வீடியோவும் வெளியானது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
‘மிஸ்டர் லோக்கல்’ படம் மே 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று சில வாரங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா? மிஸ்டர் லோக்கல் படம் மே 1 ஆம் தேதி வெளியாகவில்லை. இரண்டுவாரங்கள் கழித்து அதாவது மே 16 ஆம் தேதிதான் வெளியாகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகிறது
