
இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாராஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இதற்கு முன்னதாக இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் சிவகார்த்திகேயனின் முதல் படமாக மிஸ்டர் லோக்கல் வெளியாகியுள்ளது.
எல்லா படங்களிலும் டாஸ்மார்க் காட்சிகள் பெண்களை மிகவும் கிண்டல் பண்ணும் காமெடி காட்சிகளாக தான் இயக்குனர் ராஜேஷ் படங்கள் இருக்கும். குறிப்பாக ப்ரோப்பு இல்லாத ஹீரோக்க்காகளாக தான் வருவார்கள் இப்படி பட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் முற்றிலும் மாறுபட்டு இயக்கி இருக்கும் படம் ராஜேஷ் படம் என்றால் காமெடிக்கு கிரான்டியோடு உள்ளே நாம் போவோம் அதை முழுமையாக கொடுத்து இருக்கிறார்.
மனோகராக வரும் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் விற்னையாளராகவும், கீர்த்தனாவாக வரும் நயன்தாரா டிவி சீரியல் தயாரிப்பாளராகவும் நடித்துள்ளார். இதில், இருவருக்கும் இடையில் நடக்கும் காதல், நய்யாண்டி தான் படம்
பணக்கார பின்னணியில் இருந்து வரும் நயன்தாரா நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த சிவகார்த்திகேயன் இவர்களுடன் மோதலும் காதலும் தான் இந்த படம் இதை மிகவும் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
காட்சிக்கு காட்சி நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் மோதல் ரசிக்கும் படி அமைந்துள்ளது பல படங்களில் வந்த கதை என்றாலும் திரைக்கதை மூலமும் சிவகார்த்திகேயன் மற்றும் நயந்தாரா மூலமும் மெருக்குஏற்றி இருக்கிறார் படத்துக்குகு இவர்கள் மட்டுமே தாங்கி பிடித்துள்ளனர் .
நயன்தாரா திமிரு நடிப்பு நிச்சயம் அனைவரையும் கவரும் மேலும் இந்த படத்தில் கொள்ளை அழகு காட்சிக்கு காட்சி மிளிர்க்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப கம்பிரம் இவரை தவிர வேறு யார் நடித்து இருந்தாலும் நிச்சயம் ஏடுபட்டு இருக்காது அப்படி ஒரு ஒய்யாரம்
சிவகார்த்திகேயன் படத்துக்கு படம் தன்னை மெருக்குஏற்றி கொள்கிறார் தன் பலம் அறிந்து ரசிகர்களை ரசிக்க வைக்க வேண்டும் சிரிக்க பைக்கை வேண்டும் என்ற எண்ணத்தில் காட்சிக்கு காட்சி தோன்றுகிறார்.
அதே போல படத்தில் நடித்த யோகிபாபு, சதீஷ், தம்பிராமையா ,ரோபோ ஷங்கர் அனைவரும் குறிப்பாக ராதிகா சரத்குமார் படத்துக்கு மேலும் பலம் ராதிகா சரத்குமார் வைத்து தான் இந்த படத்தின் கதையை இயக்குனர் வடிமைத்து உள்ளாரா என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும் அந்த அளவுக்கு கதை ராதிகாவுடன் ஒன்றி இருக்கும்
இயக்குனர் ராஜேஷ் படம் எப்பவும் இருக்கும் போதை இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கலாம் மொத்தத்தில் Mr.லோக்கல் காமெடி கலக்கல்.
