Sunday, June 7
Shadow

மறுபிரவேசத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும் மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!

மறுபிரவேசத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும் மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழித் திரைப்படங்களிலும் தனது தடத்தைப் பதித்த நடிகை ஈடன் குரியகோஸ், தற்போது புதிய பட வாய்ப்புகளுடன் மீண்டும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஈடன் குரியகோஸ், வெறும் அழகை மட்டுமே நம்பி திரைத்துறைக்குள் நுழைந்தவர் அல்ல. கல்வி, கலை, நடிப்பு அனுபவம் என பல்வேறு துறைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்தவர். ஊடக மேலாண்மையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ள அவர், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.

நாடக மேடைகளில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய ஈடன், பின்னர் முறைப்படி நடிப்புப் பயிற்சி பெற்று திரைப்படங்களில் அறிமுகமானார். பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றுள்ள அவர், பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு மிஸ் கேரளா, மிஸ் கோயம்புத்தூர் உள்ளிட்ட பட்டங்களை வென்றுள்ளார். மேலும் மிஸ் சவுத் இந்தியா போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார்.

மாடலிங் துறையிலும் குறிப்பிடத்தக்க அனுபவம் பெற்றுள்ள ஈடன், பல விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலம் கேமரா முன் தன்னம்பிக்கையுடன் செயல்படும் திறனை வளர்த்துக் கொண்டார்.

தமிழில் ‘ஆண்டவ பெருமாள்’, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’, ‘ஏன்டா தலையில் எண்ண வைக்கல’ உள்ளிட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ‘காட்டுமாக்கன்’ மற்றும் இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய ‘கேர்ள்ஸ்’ படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‘கேர்ள்ஸ்’ திரைப்படத்தில் பெண் கலைஞர்கள் மட்டுமே நடித்திருந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

திரைப்படங்களைத் தாண்டி ‘மாயத்திரை’, ‘குருதிக்காலம்’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் தெலுங்கில் ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார்.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஈடன் குரியகோஸ், தமிழில் இரண்டு புதிய படங்களிலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய வாய்ப்புகள் அவரது கலைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகின்றன.

இதுவரை அவருடன் பணியாற்றிய பல இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர், ஈடனை “ஒன் டேக் ஆர்டிஸ்ட்”, “அர்ப்பணிப்பு மிக்க நடிகை” என பாராட்டியுள்ளனர். நேரம் தவறாமை, கதாபாத்திரத்திற்கான முழுமையான தயாரிப்பு மற்றும் இயல்பான நடிப்பு ஆகியவை அவரது பலங்களாகக் கூறப்படுகின்றன.

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பும் ஈடன் குரியகோஸ், தனது இரண்டாவது இன்னிங்ஸை உற்சாகமாக தொடங்கியுள்ளார். தொடர்ந்து கற்றுக்கொண்டு வளர வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் அவர், தனது மறுபிரவேசத்தை வெற்றிகரமான புதிய அத்தியாயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

திரைத்துறையில் நீண்டநாள் பயணத்திற்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்துக் கொண்டுள்ள ஈடன் குரியகோஸின் இந்த புதிய தொடக்கம், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

Multilingual Actress Eden Kuriakose Begins a New Chapter with Her Comeback

Actress Eden Kuriakose, who has made her mark in Tamil, Malayalam, and Telugu cinema, is once again attracting attention in the film industry with a series of new projects.

Hailing from Kerala, Eden Kuriakose entered the entertainment industry not merely relying on glamour but by equipping herself with the necessary skills and experience. She holds an MBA in Media Management and is proficient in Tamil, Malayalam, Hindi, and English.

Eden began her artistic journey on the theatre stage before undergoing formal acting training and making her transition to films. A trained Bharatanatyam dancer, she has also participated in several beauty pageants, winning titles such as Miss Kerala and Miss Coimbatore. She was also among the finalists in the prestigious Miss South India competition.

Apart from acting, Eden gained valuable experience in the modelling industry, appearing in numerous advertisements that helped her develop confidence and screen presence in front of the camera.

In Tamil cinema, she has appeared in films such as Andava Perumal, Irukku Aana Illa, Pani Vizhum Nilavu, and Yenda Thalaiyila Enna Vaikkala, portraying a variety of roles. In Malayalam, she played significant characters in Kattumakkan and Girls, directed by Thulasidas. Notably, Girls featured an ensemble cast comprising only female actors.

Expanding her creative portfolio, Eden has also been part of web series including Maayathirai and Kuruthikaalam, where she showcased her versatility as a performer. Her appearance in the Telugu film Srirastu Subhamastu further established her presence across South Indian cinema.

After a brief hiatus, Eden is now making a strong comeback and has signed two new Tamil films and two Malayalam projects. These opportunities are being viewed as an important turning point in her career.

Filmmakers and crew members who have worked with her have often praised her as a “one-take artist” and a performer known for her dedication, punctuality, and commitment to her craft. Her natural acting style and thorough preparation for roles continue to earn appreciation within the industry.

Eden Kuriakose is particularly interested in taking on meaningful, performance-oriented roles in films with strong storylines. With a mindset focused on continuous learning and artistic growth, she has embarked on the next phase of her career with renewed enthusiasm.

Having laid a strong foundation through years of training and experience, Eden’s comeback is being regarded as the beginning of a promising new chapter—one that is already drawing the attention of audiences and industry insiders alike.