
விஜய் ஆண்டனி இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார். அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.
இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும்.
மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு திரைப்படமாகும்.
2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த “நாக்க முக்கா” வணிகப்படத்திற்காகப் பெற்றார்.
தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.
மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்.
இவர் நடித்த படங்கள்: கொலைகாரன், அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி, காளி, திமிரு புடிச்சவன், டிராபிக் ராமசாமி, எமன், முப்பரிமானம், அண்ணாதுரை, நம்பியார், பிச்சைக்காரன், சைத்தான், இந்தியா பாக்கிஸ்தான் , சலீம், நான்
இவர் இசையமைத்த படங்கள்: மத கஜ ராஜா, காளி, திமிரு புடிச்சவன், எமன், நம்பியார், சைத்தான், பிச்சைக்காரன், ஆவிக்குமார், கதை திரைக்கதை வசனம் இயக்கம், சலீம், ஹரிதாஸ், நான், வேலாயுதம், வெடி, யுவன் யுவதி, உத்தமப் புத்திரன், அவள் பெயர் தமிழரசி, அங்காடித் தெரு, அ ஆ இ ஈ, வேட்டைக்காரன், நினைத்தாலே இனிக்கும், மரியாதை, தநா -07 அல 4777, காதலில் விழுந்தேன், பந்தயம், நான் அவன் இல்லை, சுக்ரன்
இவர் தயாரித்த படம் : இந்தியா பாகிஸ்தான்
இவர் பாடல் பாடிய படங்கள்: சலீம், யுவன் யுவதி
