சந்தோஷ் நாராயணன் ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.
இவர் இசையமைத்த படங்கள்: என்னை தெரியுமா?, அட்டகத்தி, உயிர் மொழி, பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், இறுதி சுற்று

Related