Monday, June 8
Shadow

“ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மரியாதை பாடலாக ‘நா வேற லெவல்’ உருவானது” — சென்னை மேடையில் மனம் திறந்த மலேசிய ராப்பர் கிட் சாந்தே!

“ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மரியாதை பாடலாக ‘நா வேற லெவல்’ உருவானது” — சென்னை மேடையில் மனம் திறந்த மலேசிய ராப்பர் கிட் சாந்தே!
சென்னை: தமிழ் ஹிப்-ஹாப் இசைக்கு உலகளவில் புதிய அடையாளம் உருவாக்கி வரும் மலேசிய தமிழ் ராப்பர் கிட் சாந்தே (Kidd Santhe), தனது புதிய இசைப்பாடலான “நா வேற லெவல்” பாடலை சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தினார். முன்னணி இசை நிறுவனமான sonymusic.co.in⁠� மற்றும் sonymusic.com.my⁠� இணைந்து இந்த பாடலை வெளியிட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளை கலந்த தனித்துவமான ஹிப்-ஹாப் பாணியால் இளைஞர்களிடையே பிரபலமான கிட் சாந்தே, இந்த பாடல் மூலம் தமிழ் மண்ணின் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை கொண்டாட விரும்பியதாக தெரிவித்தார்.


நிகழ்வில் பேசிய கிட் சாந்தே,
“இந்த பாடல் எனக்கான புகழ் பாடல் அல்ல. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மரியாதை பாடல் இது. சென்னை வந்தபோது ஒரு ஆட்டோ ஓட்டுநர் எனக்கு உதவிய சம்பவமே இந்த பாடலின் கருவாக மாறியது,” என்று உணர்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

மேலும்,
“எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவுகள், பைக் டாக்ஸி போட்டி போன்ற சவால்களை சந்தித்தாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்க்கையை தாங்கி நிற்கிறார்கள். அவர்களை மக்கள் வேறொரு பார்வையில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த பாடலை உருவாக்கினேன்,” என்றார்.
இந்த ஆல்பத்தை இயக்கிய இயக்குநர் பார்த்திபன் ரவி,
“இது எனது முதல் International Album. கிட் சாந்தேவின் எண்ணத்தை காட்சியாக மாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. பலர் இணைந்து உழைத்ததால் தான் இந்த பாடல் இவ்வளவு பெரிய அளவில் உருவாகியுள்ளது,” என்று கூறினார்.
sonymusic.com.my⁠� சார்பில் பேசிய ரேவதி மாரியப்பன்,
“மலேசிய தமிழ் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அளித்த வரவேற்பு நெகிழ்ச்சியளிக்கிறது. கிட் சாந்தேவின் வெற்றி, இன்னும் பல மலேசிய தமிழ் கலைஞர்களுக்கு கதவுகளைத் திறக்கும்,” என்று தெரிவித்தார்.
“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மூலம் உலகளாவிய ‘Desi Hip-Hop’ இசை உலகில் தனி கவனம் பெற்ற கிட் சாந்தே, தற்போது “நா வேற லெவல்” பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நேரடியாக சென்றடைந்துள்ளார்.

சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், ஆட்டோ ஓட்டுநர்களின் அன்றாட வாழ்க்கை, உழைப்பு மற்றும் அவர்களின் மனிதநேயத்தை கொண்டாடும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
“நா வேற லெவல்” பாடலை youtube.com⁠� தளத்தில் அதிகாரப்பூர்வமாக காணலாம்.

 

“‘Naa Vera Level’ Is a Tribute to Auto Drivers,” Says Malaysian Rapper Kidd Santhe at Chennai Launch Event

Chennai: Rising Malaysian Tamil hip-hop artist, rapper, songwriter, and music producer Kidd Santhe unveiled his latest track “Naa Vera Level” at a grand press meet held in Chennai. The song has been officially released by leading music labels and .

Known for blending Tamil, English, Malay, and Punjabi influences into his unique rap style, Kidd Santhe has emerged as one of the prominent young voices in the global “Desi Hip-Hop” movement. Through “Naa Vera Level,” the artist aims to celebrate the spirit of ordinary working-class heroes from Tamil Nadu.

Speaking at the event, Kidd Santhe said,
“This song is not about glorifying me. It is a tribute to auto drivers, the real unsung heroes who safely transport people every day. When I first came to Chennai, an auto driver helped me during a difficult moment when my car tyre got punctured. That experience became the soul of this song.”

He further added,
“Auto drivers face many struggles today — rising fuel prices, maintenance costs, and increasing competition from bike taxis. Through this song, I wanted people to look at them with more respect and appreciation.”

Director Parthiban Ravi, who helmed the music video, shared,
“This is my first international album project. Bringing Kidd Santhe’s vision alive on screen was a memorable experience. The album became possible only because of the dedication and teamwork of many talented artists and technicians.”

Speaking on behalf of , Revathi Mariappan said,
“The love and support this project has received in Tamil Nadu is overwhelming. Kidd Santhe’s success will inspire and open doors for many more Malaysian Tamil artists in the future.”

Kidd Santhe had previously gained recognition through tracks and albums such as “API,” “SAMPAH,” “Ambani Money,” and “Penjenayah.” With “Naa Vera Level,” he now directly connects with Tamil audiences through a culturally rooted and emotionally driven concept.

Shot against the vibrant backdrop of Chennai, the music video highlights the daily lives, struggles, and humanity of auto drivers, portraying them as the real backbone of urban life.

The song “Naa Vera Level” is now officially available on the . You Tube