Saturday, April 18
Shadow

நடிகர் சங்கம் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை பின்னணி என்ன

தமிழ் சினிமாவின் வழிகாட்டியாக திகழ்ந்த எம் ஜி ஆர் ,மற்றும் சிவாஜி எஸ் எஸ் ஆர் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் தென் இந்திய நடிகர் சங்கம் இந்த சங்கம் நிலைமை நாளுக்கு நாள் மோசமான சூழ்நிலையில் இருந்தது இந்த சங்கத்தை வைத்து பலர் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர்.

பின்னர் ஒரே அடியாக இந்த சங்கத்தை அழிக்க போகும் நிலையில் புது கூட்டணி பாண்டவர் கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இன்று மீண்டும் அந்த நடிகர் சங்கத்துக்கு உயிர்வந்துள்ளது. என்று சொன்னால் மிகையாகது இந்த கூட்டணியின் முயற்ச்சியால் nadigarsangam கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டினர். இதில் தமிழ் சினிமாவின் முக்கிய ஜாம்பவான்கள் அனைவரும் கலந்துகொண்டனர். குறிப்பாக ரஜினி கமல் போன்ற முன்னணி மற்றும் மூத்த நடிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததனர் . ஆனால் முக்கிய நடிகர்கள் இருவர் கலந்து கொள்ளவில்லி ஏன் என்று விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல்கள் .

விவேகம்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக செர்பியா சென்றுள்ளதால் நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அஜித் கலந்துகொள்ளவில்லை.

அட்லீ இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருவதால் விஜய் கலந்துகொள்ளவில்லை என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

Leave a Reply