Thursday, March 12
Shadow

மே 12-ல் வெளியாகிறது ‘சரவணன் இருக்க பயமேன்’

தமிழ் சினிமாவில் நல்ல திறமை இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பது நாம் அறிந்த விஷயம் அப்படி தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்த உதயநிதி ஸ்டாலின் இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் நமக்கு எது வரும் என்று தெரிந்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர் காமெடி தான் நமக்கு சிறந்தது என்று சரியான தேர்ந்த்டுத்து நடித்து அதில் வெற்றி பெற்றவர் .

சமீபத்தில் யாவர் நடித்து வெளிவர இருக்கும் படம் என்றால் அது யாமிருக்க பயம் ஏன் படம்.

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படம் மே 12-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார் இயக்குநர் எழில்.

சூரி, ரெஜினா, யோகி பாபு, மன்சூர் அலிகான், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டது. விரைவில் தணிக்கை செய்யப்பட்டு, கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சரவணன் இருக்க பயமேன்’ மே12ம் தேதி வெளியாகும்” என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ மற்றும் ‘கவுரவ் இயக்கத்தில் உருவாகும் படம்’ ஆகியவற்றி கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply