
நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா, தனது திரைப்பயணத்தின் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது 100வது திரைப்படமாக உருவாகி வரும் ‘KING 100’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நாகார்ஜுனா, ‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது தனித்துவமான திரை ஆளுமையை பதிவு செய்தவர். இந்நிலையில், அவரது நூறாவது படத்தை தமிழில் கவனம் பெற்ற இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘நித்தம் ஒரு வானம்’ மற்றும் ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ரா. கார்த்திக், இந்த முறை நாகார்ஜுனாவை மையமாக வைத்து பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னரை உருவாக்கி வருகிறார். நாகார்ஜுனாவின் திரைத் தோற்றம், அவரது ஸ்டைலான அணுகுமுறை மற்றும் கதாபாத்திரத்தின் மீதான அழுத்தமான பார்வை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் வகையில் கிளிம்ப்ஸ் அமைந்துள்ளது.
குறிப்பாக, நாகார்ஜுனாவின் 100வது படத்திற்காக இயக்குநர் ரா. கார்த்திக் உருவாக்கியுள்ள காட்சியமைப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிரடி, பிரம்மாண்டம் மற்றும் நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்ற திரை அனுபவம் என பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த கிளிம்ப்ஸ், படம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். என். சதீஸ் குமார் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பிரசாத் நிம்மகாயலா கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கும் ‘KING 100’ திரைப்படம், வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகார்ஜுனாவின் 100வது திரைப்படம் என்பதுடன், தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் – தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா இணையும் முதல் பெரிய கூட்டணியாகவும் இப்படம் கவனம் பெற்றுள்ளது. பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான கிளிம்ப்ஸ், இந்த கூட்டணி மீது ரசிகர்களுக்கு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘KING 100’ – ஒரு நடிகரின் நூறாவது படம் மட்டுமல்ல; நாகார்ஜுனாவின் நட்சத்திரப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அத்தியாயமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
படக்குழு:
- நடிகர் – நாகார்ஜுனா
- எழுத்து & இயக்கம் – ரா. கார்த்திக்
- தயாரிப்பு நிறுவனம் – அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
- தயாரிப்பாளர் – அக்கினேனி குடும்பம்
- இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
- ஒளிப்பதிவு – ராஜா மகாதேவன்
- தயாரிப்பு வடிவமைப்பு – என். சதீஸ் குமார்
- படத்தொகுப்பு – நவீன் நூலி
- கிரியேட்டிவ் புரொடியூசர் – பிரசாத் நிம்மகாயலா
- மக்கள் தொடர்பு – யுவராஜ்
- மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ
Nagarjuna’s 100th Film ‘KING 100’ Glimpses Released; Ra. Karthik’s Directorial Creates Huge Buzz
Tollywood superstar Nagarjuna is set to achieve a significant milestone in his illustrious cinematic journey with his 100th film, ‘KING 100’. The exclusive glimpses of the much-awaited film were unveiled on the occasion of Nagarjuna’s birthday, instantly raising expectations among fans and movie lovers.
Nagarjuna enjoys a strong fan base among Tamil audiences as well, having entertained them through films such as Udayam, Idhayathai Thirudathey, Thozha, Kuberaa and Coolie. Adding to the significance of his landmark 100th film is the fact that it is being directed by young and talented Tamil filmmaker Ra. Karthik, known for films such as Nitham Oru Vaanam and Made in Korea.
The newly released glimpses offer a striking look at Nagarjuna’s screen presence and larger-than-life persona. Designed as a grand commercial entertainer, the film promises a theatrical experience that blends style, action and the charisma of its lead star.
Ra. Karthik has reportedly crafted the film with Nagarjuna’s milestone 100th appearance in mind, giving special attention to the characterisation, visual presentation and dialogues. The glimpses have already generated considerable curiosity about the film and the exciting collaboration between the filmmaker and the veteran star.
The film features music by Devi Sri Prasad, while Raja Mahadevan handles the cinematography. N. Sathees Kumar is the Production Designer and Naveen Nooli is the editor. Prasad Nimmakayala serves as the Creative Producer.
Produced by the Akkineni family under the banner of Annapurna Studios, KING 100 is slated to release worldwide in theatres on December 24.
With Nagarjuna’s landmark 100th film and Ra. Karthik’s distinctive filmmaking coming together, KING 100 has already become one of the highly anticipated projects to watch out for. The birthday glimpse has further amplified the excitement surrounding the film.
KING 100 – Technical Crew
Cast: Nagarjuna
Written & Directed by: Ra. Karthik
Production House: Annapurna Studios
Produced by: Akkineni Family
Music: Devi Sri Prasad
Cinematography: Raja Mahadevan
Production Design: N. Sathees Kumar
Editing: Naveen Nooli
Creative Producer: Prasad Nimmakayala
Public Relations: Yuvaraj
Marketing: First Show
