நயன்தாரா தமிழ் சிநேமாமட்டும் இல்லை தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்பது யாம் அறிந்த விஷயம் போன வருடத்தில் இருந்து நயன்தார கவர்ச்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு சிறந்த கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார் அதில வெற்றியும் கண்டுவிட்டார் அதனால் இந்த வருடமும் சிறந்த கதாபாத்திரம் மட்டுமே நடிக்க எடுத்த நயன்தாரா கவர்ச்சி ஹீரோவோடு குத்து பாது இப்படி எல்லாம் எதுவும் வேண்டாம் இனி எந்த ஹீரோவுடனும் ஜோடி சேராமல் நல்ல கதை அவருக்கு முக்கியத்துவம் வாங்கிய கதையில் மட்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார் .
நயன்தாரா தான் யாருக்கும் ஜோடியாக நடிப்பது இல்லை என்று எடுத்துள்ள முடிவால் கீர்த்தி சுரேஷுக்கு தான் லாபம். சீனியர் ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறார்கள்.
ஆனால் நயன்தாராவோ நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார்.யாருக்கும் ஜோடியாக நடித்து மரத்தை சுற்றி டூயட் பாட அவர் விரும்பவில்லை. நயனின் இந்த முடிவால் கீர்த்தி சுரேஷின் காட்டில் வாய்ப்பு மழை சோவென பெய்கிறது.
முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி சேரும் வாய்ப்பு கீர்த்திக்கு கிடைக்கிறது. நயன்தாராவின் இடத்தை பிடிக்க விரும்புகிறார் கீர்த்தி. அந்த இடத்திற்கு நான் வருவேன் காத்திருந்து பாருங்கள் என்று வேறு கூறியுள்ளார்.
தமிழில் கார்த்தி, சூர்யா மற்றும் விஷால் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி. தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். விஜய்யுடன் அவர் நடித்துள்ள பைரவா பொங்கலுக்கு ரிலீஸாகிறது.