Saturday, April 18
Shadow

நயன்தாராவை குற்றம் சாட்டிய விவேக்கிற்கு நயன்தாரா பதிலடி

நடிகர் விவேக் கொஞ்சம் பொது மேடைகளில் பேசும் போது நகைசுவையாக பேசுகிறேன் என்று சிலர் மனதை புண் படுமாறு பேசுவார் அது அவரது சுபாவம் அது அவர் வேணும் என்று பேசுவதில்லை ஒரு புலோல சொல்லுறது அது சில சமயம் விவகாரத்தில் முடிகிறது இப்படி தான் காஷ்மோரா பட பிரஸ் மீட் ல பேசும் போது நயன்தார எந்த படத்தின் ப்ரோமோஷன்க்கு வருவதில்லை என்று குற்றம் சாட்டினார் அப்பாவும் அவர் அதை நகைசுவையாக தான் பேசுனார் ஆனால் அது இப்ப விஸ்வரூபம் எடுத்து இருக்கு அப்ப பேசுன விவேக்க்கு இப்ப பதிலடி கொடுத்துள்ளார் நயன்தாரா .

தற்போது நடிகை நயன்தாரா ஒரு பேட்டியில், நடிகைகள் புரொமோஷனுக்கு வருவதில்லை என்று விவேக் சார் கூறியதை நான் கேட்டேன். எனக்கென்று சில கொள்கைகளை வைத்திருக்கிறேன். தயாரிப்பாளர் என்னிடம் கதை சொல்ல வரும்போதே நான் விழாக்களில் கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிவிடுகிறேன்.

ஒரு மோசமான படத்தை 100 நாட்கள் விளம்பரம் செய்தாலும் தோல்விதான் மிஞ்சும். கடைசிப் பகுதிச் சம்பளத்தைத் தராமல் விட்டுவிட்டால் நடிகைகளுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்றும் விவேக் சார் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மை என்னவென்றால் என்னுடைய சம்பளத்தைப் பல சமயங்களில் விட்டுக்கொடுத்துள்ளேன். சில படங்களுக்கு என் சம்பளத்தை குறைத்துள்ளேன். இந்த விவகாரத்தில் விவேக் போன்றவர்களே கேள்வி எழுப்புவது கவலை அளிக்கிறது என்றார்.

Leave a Reply