Wednesday, October 28
Shadow

தென் இந்தியாவின் சிறந்த நடிகைக்கு எடுத்துகாட்டாக உள்ள நயன்தாரா

ஒரு நடிகை இப்படி தான் இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக இருப்பவர் என்றால் அது நயன்தாரா தான் காரணம் நயன்தாரா நடிக்கத வேஷம் இல்லை அவரை விட அதிகமாக கவர்ச்சியாக நடித்தவர் எவவ்ரும் இல்லை எல்லா நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார் ஒரு கட்டத்தில் கதைக்கு முக்குயத்துவம் தான் என்று அதில் ஒரு மிக பெரிய இடத்தை தென் இந்தியாவின் மிக சிறந்த நடிகை என்று எல்லோருக்கும் எடுத்துகாட்டாக விளங்குகிறார்

கோலிவுட்டில் விளையாட்டு பிள்ளையாக இருந்த நயன்தாரா, இப்போது அடியோடு மாறி விட்டார். எந்தவித பந்தாவும், பகட்டுமின்றி, அமைதியாக வலம் வருகிறார். நடிப்பிலும், நல்ல முதிர்ச்சி தென்படுகிறது. இந்த மாற்றம் எல்லாம், அறம் படம் வெளியானதற்கு பின் தான்.தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும், தொடர்ந்து நடித்தாலும், அங்கும், தனக்கும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறார்.

இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, விஸ்வாசம், கொலையுதிர் காலம் ஆகிய தமிழ் படங்களிலும், நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்திலும், தற்போது நடித்து வருகிறார். இதுதவிர, லவ் ஆக் ஷன் என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார்.இந்த படங்கள் அனைத்திலும், ஹீரோக்கள் இருந்தாலும், நயன்தாராவை சுற்றித் தான், கதையின் மையக் கருத்து உள்ளதாம்.