Friday, March 13
Shadow

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித் – சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் நயாகி யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply