Monday, March 20
Shadow

வைரலாகும் அஜீத் பட படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ

நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் உள்ள அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் இந்த படத்தின் நாயகிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர் உள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.