Friday, November 6
Shadow

கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமான “83” ரீலிஸ் தேதி அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பயோபிக் படத்தில் முக்கிய கேரக்டரில் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார்.  ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ரசிகர்களை பெரிதாக ஈர்த்த நடிகர் விஜய் தேவ்ரகொண்டா தற்போது பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார்.

கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக ஜொலித்த கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘83’ படத்தில் விஜய் தேவாரகொண்டா நடிக்கிறார். இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘83’ படத்தில் கபில் தேவ் கேரக்டரில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் கேரக்டரில் விஜய்தேவரகொண்டா நடிக்கிறார்.  இந்நிலையில் இந்த படம் வரும் 2020 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.