Sunday, November 8
Shadow

தல அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக வெளியாகிறது

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது. அதோடு அஜித்துக்கு இது ஒரு புதுக்களமாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைபெற்றது. இந்த படம் முதலில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது.

நமக்கு  கிடைத்த தகவலின் படி இந்த படம் இந்த படம் முன்னதாகவே ஜூலை 25 அல்லது ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  மேலும், ஆகஸ்ட் 15 ஆம்  தேதி பிரபாஸின் சாஹோ வெளியாகவிருப்பதால் நேர்கொண்ட பார்வை நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.