Saturday, April 18
Shadow

நடிகர் சந்தானம் படத்தில் இணைவாரா பிரபல காமடி நடிகர் ?

நடிகர் சந்தானம் தற்போது A1 மற்றும் டகால்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தில் பிரபல காமடி நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தை பூமராங் படத்தை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் கவுண்டமணியை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இதுவரை நடிக்க ஒப்பு கொள்ளவில்லை என்று தெரிகிறது.

கவுண்டமணி தனது உடல் நிலை காரணமாக பல படங்களை ஒப்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.