Friday, March 29
Shadow

சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

சூர்யா – செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், என்.ஜி.கே மே மாதம் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.