
சூரியாவின் என்ஜிகே வுடன் மோதுகிறதா விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’?
சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நடிக்கிறார்.
இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.
ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தின் டீசர் ஜனவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி மே 31-ம் தேதி படம் ரிலீஸாகிறது.
முன்னதாக இதேதேதியில் சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவான என்.ஜி.கே படமும் திர...