Saturday, March 25
Shadow

நிபுணன் – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3/5

நிபுணன் இயக்குநர் மற்றும் அருண் அகரதூரிகை என்னும் தமிழ் வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரும்,பல்வேறு குறும்படங்கள் இயக்கியவருமான அருண் வைத்தியநாதன் இப்படம் பற்றி சொன்னதை நினைவுப்படுத்தி கொள்ளலாமே! ”இந்த கதைக்காக நிறையப் பேரைச் சந்தித்துப் பேசினேன். துப்பறியும் நிபுணர்கள் தொடர்பான புத்தகங்களைப் படித்தேன்; படங்கள் பார்த்தேன். இங்குள்ள துப்பறியும் நிபுணர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பெங்களூருவில் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். மேலும் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு படித்தது, பார்த்தது எல்லாவற்றையும் சேர்த்து எழுதும்போது ஒரு முழுமையான கதை கிடைத்தது” என்று சொல்லி இருந்தார்.

முன்னதாக ஐ. டி வேலைக்காக அமெரிக்கா போன இடத்திலும் தன் தனிப்பட்ட ஆசையான திரைப்படத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நியூயார்க்க்கிலுள்ள பிலிம் அகாடமியில் படித்தும் சின்ன சின்னக் குறும்படங்களை எடுத்தும் தன்னை வளர்த்து வந்தார். இத்தனைக்கும் அருண் இயக்கிய குறும் படங்கள் சர்வ்தேச அளவில் பல்வேறு அவார்டுகளை வென்றன. ஆனாலும் முழு நீளப் படம் ஒன்றை அதையும் தமிழில் எடுக்க ஆசைப்பட்டு. அவர் எழுதி இயக்கிய அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படம் தனி கவனத்தை பெற்றது. இதையடுத்து மோகன்லாலை வைத்து கொடுத்த பெருச்சாளியை இன்றளவும் பலராலும் மறக்க முடியாது.

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு க்ரைம் திரில்லர் கதை, ரொம்ப நாளாக பேய் காதல் என்று பார்த்துக்கொண்டே இருந்த நமக்கு ஒரு புதுவித அனுபவம் என்று சொல்லணும் படத்தின் முதல் காட்சியிலே இயக்குனர் நம்மை நாற்காலியின் நுனிக்கு வரவைக்குகிறார் என்று சொல்லணும். ஒரு படத்தின் வெற்றிக்கு முதலில் நல்ல கதை அப்புறம் அந்த கதைக்கு தேவையான நட்சத்திரம் வேண்டும் இவை னைத்தும் இந்த படத்தில் அமைந்துள்ளது என்று தான் சொல்லணும்

இயக்குனர் நமக்கு மிகவும் பரிச்சைமாணவர் என்று தான் சொல்லணும் தமிழில் இரண்டு வெற்றிகள் கொடுத்தவர் அது மட்டும் இல்லாமல் மலையாளத்தில் மோகன்லால் வைத்து பெருச்சாளி என்ற மாபெரும்வெற்றி படத்தை கொடுத்தவர் தமிழில் நடிகர் பிரசன்னாவை வைத்து அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் கல்யாணசமையல் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். படத்துக்கு படம் வித்தியாசமான கதையுடன் வரும் இயக்குனர் என்று சொல்லலாம் ஆம் இந்த படம் போன்ற மூன்று படங்களில் இருந்து முழுமையுளும் வித்தியாசம் காண்பித்து வெற்றி பெற்றுள்ளார் என்று தான் சொல்லணும்

சரி படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கதை களம் பார்ப்போம் போலீஸ் என்றால் நமக்கு ஏன் தமிழ் சினிமாவில் அர்ஜுனும் ஒருவர் என்று சொல்லலாம் இந்த படத்தில் அவர்தான் ஹீரோ அது மட்டும் இல்லை இது அவருக்கு 150 படம் அதுனாலே என்னவோ இயக்குனர் அவரையும் அவர் கதபாத்திரத்தையும் மிகவும் அழகாக ஸ்டைலாக செய்துள்ளார் அவருக்கு உதவியாளர்களாக பிரசன்னா மற்றும் வரலக்ஷ்மி பிரசன்னா நடிப்பில் மிக நல்ல ஒரு தேர்ச்சி என்று சொல்லணும் அதேபோல வரலக்ஷ்மி நடித்த ஒரு நல்ல படம் என்றும் சொல்லணும் அழகாக ஸ்டைலாக இந்த படத்தில் நடித்துள்ளார் அவரின் உருவத்துக்கு ஏற்ற கதாபாத்திரம் என்று தான் சொல்லணும் மற்றும் வைபவ் அஜ்ர்ஜுன் தம்பியாக வருகிறார் பெரிய ரோல் இல்லை என்றாலும் சிறப்பாக செய்துள்ளார்.

அர்ஜுன் மனைவியாக அறிமுக நடிகை சுருதி ஹரிஹரன் நல்லவரவு என்று தான் சொல்லணும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி சிறப்பு சுமன் மற்றும் சுஹாசினி படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்று சொல்லணும் இவர்களை வைத்து தான் கதை நகருகிறது மற்றும் பலர் நடிப்பில் அதாவது இன்னும் மிக முக்கிய சஸ்பென்ஸ் கதாபாத்திரங்களுடன் படம் மிக சஸ்பென்ஸ் ஆகா நகருகிறது என்று தான் சொல்லணும்.

படத்தின் கதையை பாப்போம் இல்லை கதையை சொல்ல முடியாது அப்படி சொன்னால் படம் பார்க்கும் விறுவிறுப்பு போகும் என்றுதான் சொல்லணும் ஒரு தொடர் கொலை வித்தியாசமான முறையில் ஒவ்வொரு கொலை செய்துவிட்டு அடுத்த கொலை யார் எந்த துறையை சேர்ந்தவர்கள் என்றும்துப்பும் கொடுத்துவிட்டு கொலை செய்கிறான் எதற்கு கொலைசெய்கிறான் ஏன் கொலைசெய்கிறான் என்பதை கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை ஒவ்வொரு கொலை செய்துவிட்டு அடுத்த கொலை யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் போலீஸ் ஆகா அர்ஜுன் பிரசன்னா மற்றும் வரலக்ஷ்மி அருமையான நடிப்பை வெளிபடுதியுள்ளனர். போலீஸ் என்றதும் கஞ்சி போட்ட சட்டை மாதிரியெல்லாம் இல்லாமல் ஜாலியாக காமெடியாக ஆனால் விறு விருப்பாக சொல்லிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது திரைகதை தான் என்று சொல்லணும் மிக நேர்த்தியான முறையில் திரைகதை அமைத்துள்ளார் என்று சொல்லணும் அதே போல படத்துக்கு மிக பெரிய பலம் ஒளிப்பதிவு அருமையான ஒளிப்பதிவு அதிக கட்சிகள் இரவில் நடப்பது போல இருக்கு அதை உணர்ந்து ஒளிப்பதிவு செய்துள்ளார் அரவிந்த் கிருஷ்ணா அவருக்கு நிச்சயம் பாரட்டுகள் அதே போல இசையும் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார் இசையமைப்பாளர் எஸ்.நவீன் அமைதியான ரசிக்கும் பின்னணி

மொத்தத்தில் நிபுணன் சிறப்பு Rank 3/5

Leave a Reply