Saturday, December 14
Shadow

இயக்குனர் ராமின் ‘தரமணி’ திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 20 ஆம் தேதியும், திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதியும் வெளியாக உள்ளது….

ஐ டி தொழிற்சாலைகளின் சொர்க வாசலாக திகழ்ந்து கொண்டிருப்பது   ‘தரமணி’ என்பதை அனைவரும் அறிவர்…. ஆனால் இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும், தரமணிக்கு இருக்கின்றது….அந்த மற்றொரு பக்கத்தை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான், ;தங்க மீன்கள்’ ராம் இயக்கி, ‘ஜே எஸ் கே பிலிம்  கார்பொரேஷன்’ சார்பில் ஜே சதீஷ் குமார் தயாரித்து வரும் ‘தரமணி’ திரைப்படம். அறிமுக நடிகர் வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தரமணி’ படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது…. இந்த டீசர் இளம்  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது….யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் தரமணி படத்தின் பாடல் வெளியீட்டு விழா  வருகின்ற நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  அதனை தொடர்ந்து வருகின்ற டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி , பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த  ‘தரமணி’ திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், காலம் சென்ற பாடலாசிரியர் நா முத்துக்குமார், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் வீணா சங்கரநாராயணன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் தரமணி திரைப்படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.
“வலுவான கதைக் களங்களை கொண்ட திரைப்படங்கள் மட்டும் தான் தேர்வு செய்து நான் தயாரித்து வருகிறேன்…. அந்த வகையில் எங்கள் ஜே எஸ் கே நிறுவனத்தின் சிறந்ததொரு படைப்பாக தரமணி திரைப்படம் இருக்கும்.  பொதுவாக நான் தயாரிக்கும்  திரைப்படங்களில் இருக்கும் பொழுதுபோக்கு சிறப்பம்சங்கள் இந்த வலுவான கதையம்சத்தில்   நிறைவாக  இருப்பது தான்  ‘தரமணி’ திரைப்படத்தின் தனிச் சிறப்பு…..தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் எனக்கு இந்த தரமணி திரைப்படம் மேலும் சிறப்பை பெற்று தரும் என முழுமையாக நம்புகிறேன்…. வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் மற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை போல தரமணி திரைப்படமும் இருக்கும்… மிகுந்த உற்சாகத்துடனும், அசைக்க முடியாத தன் நம்பிக்கையுடன் முதல் முறையாக வர்த்தக களத்தில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் ராம்…. யுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசை எங்கள் படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது…. இதுவரை யாவரும் கண்டிராத, கேட்டிராத புதுமையான விளம்பர யுக்தியை நாங்கள் எங்களின் தரமணி திரைப்படத்தில் கையாள இருக்கின்றோம்….வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி பாடல்களை வெளியிடவும், அதனை தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் தேதி திரைப்படத்தை பிரம்மாண்ட முறையில் வெளியிடவும் நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்…. தரமணி திரைப்படத்தின் தெலுங்கு உரிமையும் விற்கப்பட்டு விட்டதால், தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எங்களின்  தரமணி திரைப்படத்தை வெளியிட உள்ளோம்…. 2016 ஆம் ஆண்டை ரசிகர்கள் மலர்ந்த புன்னகையோடு நிறைவு செய்வதற்கு ‘தரமணி’ திரைப்படம்   உறுதுணையாய் இருக்கும் ….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனத்தின் நிறுவனரும், தயாரிப்பாளருமான ஜே சதீஷ் குமார்.

Leave a Reply