
ரஜினிகாந்த் எப்பவுமே தனக்கு பிடித்த இயக்குனர்களுடன் தொடர்ந்து இணைவது வழக்கம் உதாரணத்துக்கு இயக்குனர் ரவிக்குமார் சுரேஷ் கிருஷ்ணா ராஜ சேகர் போன்ற இயக்குனர்களுடன் குறைந்த பட்சம் மூன்று படங்களுடன் பணி புரிந்து இருப்பார். அவை அனைத்தும் வெற்றி படங்களாக தான் இருக்கும் அந்த வகையில் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்வுடன் மீண்டும் இணைகிறார் அவருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்.
ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸும் முதன் முதலாக இணைந்துள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினியுடன் இணைந்து கதாநாயகியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார்.
ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி, குசேலன் சிவாஜி ஆகிய படங்களில் நடித்துள்ள நயன்தாரா, நான்காவது முறையாக ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் இணைந்துள்ளார்.
தர்பார் படம் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்தால் அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் அதிகமான சம்பளம் கேட்பார் என்று படத்துறையில் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துக்கு ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இப்படத்தை ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தர்பார் படம் 2020 – பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவங்கும் என்கிறார்கள்.
