
விஜய் என்ற மூன்று எழுத்து சாதிக்க பிறந்தவர் என்று பல நேரங்களில் உறுதி செய்துள்ளார் அதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளார் நான் தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று மறுபடியும் நிரூபித்துள்ளார்.
பிரான்ஸ் பாக்ஸ் ஆபிஸில் கடந்த 3 ஆண்டுகளிலும் விஜய் படம் தான் முதலிடத்தில் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய்க்கு தமிழ்நாட்டில் பெரும் ரசிகர்கள் படை இருப்பது அனைவரும் நன்கு அறிந்ததே. தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், வெளிநாடுகள் என விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் அவருடைய படங்கள் நல்ல வசூலை குவித்து வருகின்றன. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் விஜய் படங்களுக்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது பிரான்ஸ் நாட்டில் கடந்து 3 ஆண்டுகளில் தமிழ் படங்களில் முதலிடம் பிடித்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
2016, 2017, 2018 -ம் ஆண்டுகளில் வெளியான அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி விஜய்யின் படங்களே முதலிடத்தில் உள்ளது. 2016-ம் ஆண்டு வெளியான படங்களில் தெறி படம் 24,827 பார்வையாளர்களுடனும், 2017-ம் ஆண்டு வெளியான படங்களில் மெர்சல் படம் 32,471 பார்வையாளர்களுடனும், 2018-ம் ஆண்டு வெளியான படங்களில் சர்கார் படம் 25,378 பார்வையாளர்களுடனும் முதலிடத்தில் உள்ளது.
