
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் கொண்டு மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.
இந்த படத்தின் கதையை இங்கே பார்க்கலாம். சந்தேகத்தின்பேரில் மாசிலாமணியை (பார்த்திபன்) கைது செய்கிறது காவல்துறை. ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. இப்போது பார்த்திபன் கதை சொல்லத்தொடங்குகிறார்.
இதற்கு முன்பு சொல்லப்பட்ட அனைத்துப் படங்களிலும், பெயருக்காவது சில கதாபாத்திரங்கள் படத்தின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ எட்டிப்பார்க்கும். ஆனால், `ஒத்த செருப்பு’ படத்தின் இரண்டு மணி நேரம் முழுக்க திரையில் பார்த்திபன் மட்டுமே. நடித்ததோடு மட்டுமல்லாமல் படத்தை எழுதி, இயக்கியும் இருக்கிறார்.
கேமராவுக்கு முன், கேமாராவுக்குப் பின் என்கிற வகையில் உலகிலேயே இது புது முயற்சி. ஒத்த செருப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் ஹீரோ எல்லாமே பார்த்திபன்தான். நடிப்பில் நிச்சயமாக நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். ஒருவர் மட்டுமே நீண்ட நேரமாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை தன்னுடைய அபார நடிப்புத்திறனால் பலநேரங்களில் மறக்கடித்திருக்கிறார். பார்த்திபனின் நடிப்புப் பசிக்கு அவரே தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
பார்த்திபனுக்கு அடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் ரஸூல் பூக்குட்டி. ஓர் அறையில் மட்டுமே கதை நடக்கிறது. அவ்வப்போது பக்கத்து அறைக்குள் நுழைகிறது ராம்ஜியின் கேமரா. மற்றபடி நமக்குத் தெரிவது எல்லாம் பார்த்திபன். அவர் கழிவறைக்குள் செல்வது, பறவைகளுடன் பேசுவது என One Act play தான்.
இளையராஜாவின் பாடல்களை பின்னணி இசையாகக் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளியான பல படங்கள் பயன்படுத்திவிட்டன. காட்சிகளுக்கு ஏற்ப, இதில் இளையராஜாவின் பாடல்களை செறிவாகப் பயன்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். டைட்டில் கார்டு சொல்வது போல், இதற்கு இசைந்த இளையராஜாவுக்கு நன்றி.
சும்மாவே பேசிக்கொண்டு இருக்கும் பார்த்திபன், இதில் படம் முழுக்கப் பேச வேண்டும் என்கிற டாஸ்க் கொடுத்தால் பேசாமல் இருப்பாரா? அதிகமாக பேசி கொண்டே இருக்கிறார்.
படத்தின் பிளஸ்: பார்த்திபன், ரஸூல் பூக்குட்டி நடிப்பு, இளையராஜா இசை
படத்தின் மைன்ஸ்: பார்த்திபனின் அதிகமான பேச்சு
மொத்தத்தில் கண்டிப்பாக ஒருமுறை அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
