‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் கொண்டு மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.
இந்த படத்தின் கதையை இங்கே பார்க்கலாம். சந்தேகத்தின்பேரில் மாசிலாமணியை (பார்த்திபன்) கைது செய்கிறது காவல்துறை. ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. இப்போது பார்த்திபன் கதை சொல்லத்தொடங்குகிறார்.
இதற்கு முன்பு சொல்லப்பட்ட அனைத்துப் படங்களிலும், பெயருக்காவது சில கதாபாத்திரங்கள் படத்தின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ எட்டிப்பார்க்கும். ஆனால், `ஒத்த செருப்பு' படத்தின் இரண்டு மணி நேரம் முழுக்க திரையில் பார்த்திபன் மட்டுமே. நடித்ததோடு மட்டுமல்லாமல் படத்தை எழுதி, இயக்கியும் இருக்கிறார்.
கேமராவுக்கு முன், கேமார...
