
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், இந்த சீஸனில் மக்கள் மனதை வென்ற டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். அனால் இந்த சீசன் பெரிதாக எடுபடவில்லை என்பது தான் உண்மை
எப்படியும் ரசிகர்களை ரசிக்கவைக்கவேண்டும் என்று போன சீசனிலிருந்து கலந்து கொண்டவர்களையும் வரவைத்தனர் ஆனாலும் நிகழ்ச்சி பெரிதாக ஒன்னும் எடுபடவில்லை காரணம் இந்த முறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் இந்த முறை கலந்துகொண்டவர்கள் எல்லோரும் நாமும் ஒவியாக ஆகிவிடலாம் என்று தான் வந்தனர் அதற்கான முயற்சியும் செய்தனர் அனால் மக்கள் ஏற்று கொள்ளவில்லை
யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், பாலாஜி, மமதி சாரி, நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி ஆகிய 17 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
அதில், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த சீஸன் போட்டியாளர்கள், இந்த சீஸனில் இருந்து வெளியேற்றப்பட்டப் போட்டியாளர்கள் என அடிக்கடி ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ‘உங்களையும் வீட்டுக்குள் பார்ப்பதற்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா?’ என ஓவியா ரசிகர் ஒருவர், அவரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த ஓவியா, ‘ஆமாம், காத்திருந்து பாருங்கள்’ எனப் பதிலளித்துள்ளார். எனவே, இறுதி நாளின்போது அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீஸனின் முதல்நாளின்போதே ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வந்த ஓவியா, தானும் இந்த முறை போட்டியாளராகக் கலந்து கொள்வேன் என்று கூறி ஜாலி கலாட்டா செய்தது குறிப்பிடத்தக்கது.
