Monday, April 20
Shadow

லெஸ்பியனாக மாறிய ஓவியா கசிந்த உண்மை தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா புகழ் முன்னணி நடிகர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளது அவரை பற்றிய வந்தாலே போதும் அதோடு அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய அளவில் பேசபடுகிறது எங்கு சென்றாலும், எதை செய்தாலும் அது காட்டு தீ போல வேகமாக பரவி வரும் நிலையில், அவர் லெஸ்பியனாக மாறிவிட்டார், என்ற தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரிக்கையில், ஒரு படத்தில் அவர் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கிறாராம். அதை தான் சில நெட்டிசன்கள் இப்படி கொளுத்தி போட்டுவிட்டார்களாம்.

’குளிர் 100’ படத்தை இயக்கிய அனிதா உதீப் தற்போது இயக்கு வரும் படம் ‘90 எம்.எல்’. இந்த படத்தில் ஓவியா தான் ஹீரோயின். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார்.

தற்போது ‘காஞ்சனா 3’ மற்றும் ‘களவாணி 2’ ஆகியப் படங்களில் நடிக்கும் ஓவியா, மூன்றாவதாக ‘90 எம்.எல்’ படத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தில் ஓவியா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லெஸ்பியன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது தான் என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஓவியா இப்படிப்பட்ட வேடத்தில் நடிப்பதும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.