தமிழ் சினிமாவில் சீசன்கள் அதிகம் அதாவது காதல் படங்கள் வந்தால் தொடர்ந்து வரும் அதேபோல பேய் படம் வெற்றி கிட்டதட்ட ஒரு ஐந்து ஆண்டுகளாக இருந்து வந்துகொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன பிரேக் அப்புறம் வந்துள்ள பேய் படம்.
பொதுவாக தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் கிராபிக்ஸ் தலையைவிரித்து அகோரமான முகங்களை கொண்டு தான் பேய் படங்கள் வரும் அதில் பாதி பயத்தை பின்னணி இசை மூலம் தான் பயமுறுத்துவார்கள் அனால் நாகேஷ் திரையரங்கம் படத்தில் அப்படி இல்லாமல் வித்தியாசமான கதை களம் பேயுடன் ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்து இருகிறார்கள். அதாவது சமுகத்தில் நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் இசாக்
வித்தியாசமான கதைக்கலாம் அதற்கு தேவையான நட்சத்திரம் அது படத்துக்கு மேலும் பலம் முதல் பாதியை காமெடி படமாகவும் இடைவேளைக்கு முன் ஒரு சின்ன பேய் பயத்தை கொடுத்து கலகலவென விறு விருப்பாக கொடுத்து இருக்கிறார் . முக்கியமாக படத்தை குடும்பத்தோடு அதாவது குழந்தைகளோடு சென்று பார்க்க கூடிய படமாக அமைத்துள்ளது மேலும் சிறப்பு அதுக்கு இயக்குனருக்கு பாராட்டு
சரி படத்தில் நடித்தவர்களை பாக்கலாம் ஆரி நாயகன் நாயகியாக ஆஷ்னா சாவேரி, ஆரி தங்கையாக அதுல்யா ரவி, இன்னொரு நாயகியாக கதையின் பலமாக வரும் மாசூம் சங்கர் ஆரியின் அம்மாவாக சித்தார்த்தா ஆரியின் நண்பனாக காளி வெங்கட் ஆரி தம்பியாக அபிலாஷ் , மற்றும் கதைக்கு தேவையான மனோபால அணில்முரளி இவர்களுடன் எவர் கிரீன் லதா அவர்களும் நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஸ்ரீ காந்த் தேவா ஓளிப்பதிவு இ.ஜே.நுசாத் இயக்கம் இசாக் சரி கதையை பாக்கலாம்
நாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார்.
பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் ஒரு வழிக்கு வருவான் என்று ஆரியின் அம்மா பெண் தேடுகிறார். அதில் ஆஷ்னா ஷவேரியை அவருக்கு பேசுகின்றனர். நல்ல பணக்காரனாக, ஐ.டியில் வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஆஷ்னா, ஆரியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.
பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் ஆரியின் நல்ல குணம் அறிந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஆஷ்னாவின் நண்பர், அதுல்யாவை காதலிப்பதாக சொல்லி பெண் கேட்க, சம்மதம் தெரிவிக்கும் ஆரி, அவரை குடும்பத்துடன் வந்து பெண் கேட்கும்படி அழைக்கிறார்.
பின்னர் அதுல்யாவுக்கும், அவளது காதலருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. பின்னர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பதற்காக அதுல்யா பெயரில் இருக்கும் நாகேஷ் திரையரங்கத்தை விற்க ஆரி முடிவு செய்கிறார்.
அதற்காக ஆரி மற்றும் காளி வெங்கட் அந்த திரையரங்கிற்கு செல்கின்றனர். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. அந்த திரையரங்கில் பேய் இருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதேநேரத்தில் ஆரியின் கனவில் வரும் நபர்கள், நிஜத்தில் ஒவ்வொருவராக இறக்கின்றனர்.
இவ்வாறாக குழப்பங்களுக்கு இடையே கடைசியில் ஆரி, நாகேஷ் திரையரங்கத்தை விற்றாரா? அதுல்யா திருமணத்தை நடத்தினாரா? ஆஷ்னா சவேரியுடன் இணைந்தாரா? அந்த கனவில் நடந்தது சம்பவத்திற்கும், என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் கதைக்கும் தனக்கு வெற்றி தேவை என்பதை உணர்ந்து செயல் பட்டுள்ளார் என்று தான் சொல்லணும் மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுதரவேண்டுமா அதுபோல தான் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் குறிப்பாக இரண்டாம் பாகத்தில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் கிளைமாக்ஸ் காட்சிகளில் காட்சிகளையும் அதன் வலிமையும் உணர்ந்து மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக சிறந்த கலைஞன் நிச்சயமாக ஒரு பெரிய இடம் இவருக்கு காத்து இருக்கிறது.
ஆஷ்ணா சாவேரி தனக்கு கொடுத்த வேலையை மிகவும் உணர்ந்து நடித்துள்ளார் காமெடிக்கு காமெடி காதல் காட்சியில் ஆபாசம் இல்லாமல் அழகா தன் நடிப்பை உணர்த்தியுள்ளார் அதுல்யா ரவி ஆரியின் தங்கை வாய் பேசமுடியாத பெண்ணாக வருகிறார் தங்கை வேடம் என்றாலே சின்ன காதபாதிரம் தான் இருந்தும் மிக சிறப்பாக நடித்துள்ளார்.
மாசூம் சங்கர் புதுமுக நடிகை இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். சபாஷ் சொல்லும் அளவுக்கான ஒரு நடிகை நிச்சயம் திழ் சினிமாவில் வளம் வருவார் நடிப்பு மூலமாகவே மேக் அப் கொஞ்சம் கவனம் தேவை அதே போல உடைகளில் கண்டிப்பாக கவனம் தேவை நல்ல நடிகையை கவர்ச்சி நடிகை என்ற முத்திரை வந்து விடக்கூடாது
காளி வெங்கட் காமெடியில் முத்திரை பதிக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பலன் கிடைத்துள்ளது என்று சொல்லலாம். சித்ரா லட்சுமணன், மனோபாலா, அணில் முரளி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.
முதல் பாதியில் குடும்பம், காதல், காமெடி என மசாலாவாகவும், அடுத்த பாதியில் பேய், பயம் எனவும் ரசிக்கும்படியாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஐசாக். முதல் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும், இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் தொய்வு இருப்பது போன்று தோன்றுகிறது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் மிக சிறப்பாக உள்ளது பாவம் ஆரி, ஆரி தம்பியாக நடித்தவர் இந்த இவர்களை மிகவும் சிரமப்பட்டு நடித்து அந்த காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்திருப்பது மேலும்சிறப்பு.
மொத்தத்தில் நாகேஷ் திரையரங்கம் ரசிக்கலாம் Rank 3/5