
பிரபல தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இதுவரை திரையுலகில் பெறாத பெயரை தனது உண்மையான குணத்தினால் சில நாட்களிலேயே பெற்றவர் ஓவியா.
இதுவரை நடிகைகளுக்கென ஆர்மி, நேவி போன்றவை உருவானதே இல்லை, முதல் முதலாக இவை ஓவியாவுக்கு தான் உருவாக்கப்பட்டன, இவருக்கு கிடைத்துள்ள இந்த பெயரால் தற்போது இவரது மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது.
இந்நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள முருகதாஸின் படத்தில் ஓவியாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது, விஜய் படம் என்றால் ஓவியாவா மறுக்கவா போகிறார்?
