நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மக்களிடையே செல்லப் பிள்ளையாக மாறிவிட்டார். இதனால், இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நடிகை ஓவியா மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் மேடையிலிருந்த போது, ரசிகர் ஒருவர் அவரிடம் தன் பெயரை மூன்று முறை சொல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஓவியா அவர் கன்னத்தில் முத்தமிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார்.
அதன்பின், மீண்டும் மேடைக்கு வந்த அவரை ஓவியா கட்டிப்பிடித்து, அனைவரையும் வாயை பிளக்க வைத்தார். தற்போது, அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.