![](https://www.cinemapluz.com/wp-content/uploads/2018/02/suriya-1.jpg)
சூர்யா-ஜோதிகா தம்பதியினர் நடிப்பில் தூள் கிளப்புவார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இவர்களுடைய மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் நடிப்பில் அசத்துகிறார்கள் என்ற விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் பாடகி ஷாலினி குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி நடத்தினார். இதில் சூர்யாவின் குழந்தைகள் 2 பேரும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில், சூர்யா மகன் தேவ் மேடை நடிகருடன் வாள் ஏந்தி சண்டை போடும் வீடியோ காட்சியும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மகள் தியா மேடை நாடகத்தில் நடித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இருவரும் முக பாவனைகளையும், உடல் அசைவுகளையும் அருமையாக வெளிப்படுத்தி இருப்பது இந்த வீடியோ, புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சூர்யா ரசிகர்கள் தியா, தேவ் நடித்த வீடியோவையும் புகைப் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு சிங்கத்துக்கு, பிறந்தது சிங்கங்கள்தான் என்று புகழ்ந்து வருகிறார்கள்.